2026: சனி வக்ரப் பெயர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு சவாலாக அமையப் போகிறதாம்

By Sakthi Raj Jul 21, 2026 10:09 AM GMT
Report

 ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் என்றால் அது சனி பகவான் தான். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி முதல் டிசம்பர் 11 ஆம் தேதி வரை 138 நாட்கள் சனி பகவான் மீனராசியில் வக்ர நிலையில் இருப்பார்.

இதனால் ஒரு சில ராசிகளுக்கு சவாலாக அமையக்கூடும் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

2026: சனி வக்ரப் பெயர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு சவாலாக அமையப் போகிறதாம் | 3Zodiac Must Safe On 2026 July Sani Vakra Peyarchi

கர்மாவின் முக்கியமான 9 பதிலடி என்ன தெரியுமா ?

கர்மாவின் முக்கியமான 9 பதிலடி என்ன தெரியுமா ?

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பகவானுடைய வக்கிர பெயர்ச்சியானது இவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் கடுமையான மன அழுத்தத்தை கொடுக்கப் போகிறது. பணி சுமை அதிகரிக்கும். இந்த காலகட்டங்களில் அதிகமான சவால்களையும் எதிர்பாராத தடைகளையும் சந்திப்பீர்கள்.

அலுவலகத்தில் சக ஊழியர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டு அதில் சிக்கக் கூடிய நிலைமை வரலாம். வியாபாரத்தில் லாபம் மற்றும் நஷ்டம் இரண்டும் சந்திக்கக்கூடிய நிலையை உருவாக்கும்.

சிம்மம்:

இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் தேவையில்லாத செலவுகளையும் நிதி நெருக்கடிகளையும் கொடுக்கப்போகிறது. வேலை தொடர்பாக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய மன அழுத்தத்தை கொடுக்கலாம்.

தொழிலில் சில சவால்களை சந்திப்பீர்கள். வேலை செய்யும் இடங்களில் உங்களிடமிருந்து அதிகமான வேகலையை வாங்கி கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. மேல் அதிகாரிகளிடம் முரண்பாடுகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. எடுக்கும் முயற்சிகளில் தடைகளை சந்திப்பீர்கள்.

12 ராசிகளின் மிகப்பெரிய கனவு என்ன தெரியுமா?

12 ராசிகளின் மிகப்பெரிய கனவு என்ன தெரியுமா?

தனுசு:

இவர்களுக்கு இந்த காலகட்டம் வீடு அல்லது சொத்து தொடர்பான பிரச்சனையால் மன அழுத்தம் வரலாம். குடும்பத் தேவைகள் மற்றும் தனிப்பட்ட சூழ்நிலைகள் தொழில் ரீதியாக முக்கிய முடிவுகள் எடுக்கும் பொழுது பாதிப்புகளை சந்திப்பீர்கள்.

இந்த காலகட்டங்களில் உடல்நலத்தில் மிகுந்து கவனம் செலுத்த வேண்டும். நினைத்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமில்லாமல் போவதற்கான வாய்ப்புகள் உண்டு. வியாபாரிகள் இந்த காலகட்டங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US