2026 சனி வக்ர பெயர்ச்சி: துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்க போகிறது
2026 ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி சனிபகவான் மீன ராசியில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.
துலாம்:
இந்த காலகட்டங்களில் இவர்கள் உடல் நலனில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இடுப்பு மற்றும் கால் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். பொருளாதார ரீதியாக பெரிய அளவில் இல்லை என்றாலும் குறைவின்றி அவ்வப்போது தேவைக்கேற்ற வருமானத்தை பெறுவீர்கள்.
விருச்சிகம்:
குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பாக கவலைகள் வரலாம். தொழில் ரீதியாக சில குழப்பங்களை சந்திக்ககூடும்.
தனுசு:
இந்த காலகட்டங்களில் நீங்கள் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. உறவுகளிடையே நம்பிக்கையோடு செயல்படுவது அவசியம். யாரையும் எளிதில் நம்பி முக்கியமான விஷயங்களை செய்யாதீர்கள்.
மகரம்:
இந்த காலகட்டங்களில் உங்களுக்கு திடீர் நன்மைகளும் எதிர்பாராத முக்கிய பொறுப்புகளும் வந்து சேரும். கடந்த கால கசப்புகள் மறந்து புதிய வாழ்க்கையும் முயற்சிகளையும் எடுப்பீர்கள்.
கும்பம் :
மருத்துவர் ரீதியாக பரிசோதனைகள் மற்றும் தொழிற்சார்ந்த திடீர் மாற்றங்கள் வரலாம். சனி மற்றும் ராகு சேர்க்கையால் வேலை மற்றும் உடல் நலனில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மீனம்:
இந்த காலகட்டங்களில் நமக்கு விடாமுயற்சியும் கடின உழைப்பும் அவசியம். பிறருக்கு உதவக்கூடிய மனப்பான்மை மற்றும் பொறுமை தேவை. அது உங்களுக்கு பின்னாளில் அதிக அளவில் நன்மையை பெற்றுக் கொடுக்கும்.
மேலும், இந்த காலகட்டங்களில் கஷ்டங்களில் இருந்து விடுபடுவதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றிய தகவல்களை இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |