நாளைய ராசி பலன் (22-07-2026)
மேஷம்:
மனைவி வழியே உங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். கூட்டாளிகளின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். மனதிற்கு பிடித்த விஷயங்களை வாங்கி மகிழ்வீர்கள். சாதகமான நாள். தேவைகள் நிறைவேறும்
ரிஷபம்:
எதிர்பாராத புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட நாட்களாக தொந்தரவு செய்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பிறருடைய பேச்சை கேட்டு எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் எடுக்க வேண்டாம்.
மிதுனம்:
உடன் பிறந்தவர்களை பற்றிய புரிதல் உண்டாக்கும். வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுவது அவசியம். பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
கடகம்:
சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் சில முக்கிய வேலை முடியும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
சிம்மம்:
மாறுபட்ட அணுகுமுறையால் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பால் முக்கியமான காரியம் நிறைவேறும். சுபகாரிய நிகழ்ச்சிகளில் நீங்கள் கலந்து கொள்வீர்கள்.
கன்னி:
மனரீதியாக இருந்து வந்த குழப்பங்கள் விலகும். எதிர்பார்த்த பணம் மற்றும் உதவிகள் உங்களை வந்து சேரும். உறவினர்களுடைய முழு ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். நண்பர்கள் வழியே இருந்த வேறுபாடுகள் விலகும்.
துலாம்:
இன்று உங்கள் சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். சொத்து பிரச்சனைகளில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். உடன் பிறந்தவர்கள் வழியாக உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். திருப்தியான நாள்.
விருச்சிகம்:
கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்வது அவசியம். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
தனுசு:
ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான வேலை மூலம் உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். சுபச்செய்திகள் வந்து சேரும்.
மகரம்:
மனதில் புதுவிதமான தேடல் உருவாகும். வேலை செய்யும் இடங்களில் பொதுப் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆன்மீக தேடல்களில் இறங்குவீர்கள். திடீர் பயணங்கள் வழியாக உங்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும்.
கும்பம்:
இறைவழிபாட்டில் மனம் அதிக ஈடுபாடு செலுத்தும். சமுதாய பணிகளில் நீங்கள் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். எதிர்பாராத சில இடமாற்றம் நடக்கலாம். உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
மீனம்:
இன்று தேவை இல்லாத விவாதங்களை தவிர்க்க வேண்டும். விலை உயர்ந்த பொருட்களின் மீது அதிக கவனம் செலுத்துவீர்கள். நீண்ட நேரம் கண் விழித்து இருப்பதை குறைத்துக் கொள்வது நல்லது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |