இந்த 3 ராசியில் பிறந்தவர்களுக்கு அம்மனின் முழு அருள் எப்பொழுதும் இருக்குமாம்

Report

ஜோதிடத்தில் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ஒரு சில தெய்வத்தின் முழு அருள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படியாக, எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு அம்மனின் அருள் இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

தனுசு:

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு எட்டாம் அதிபதியாக சந்திரன் இருப்பதால் சந்திர பகவானின் அதிதேவதியான பார்வதியை இவர்கள் வழிபாடு செய்வது மிகச் சிறப்பான பலன்களை கொடுக்கும்.

அதே போல், இவர்கள் லலிதாம்பிகை அல்லது ராஜ ராஜேஸ்வரி வழிபாடு செய்யலாம். கூடுதலாக இவர்கள் திருவேற்காடு கருமாரி அம்மனை வழிபாடு செய்யும் பொழுது இவர்களுக்கு வாழ்க்கையில் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகி சிறப்பான பலன்களை கொடுக்கும்.

மீண்டும் மீண்டு வரும் மீனம்.. இவர்களின் பலம் பலவீனம் என்ன? அதிர்ஷ்டம் காலம் எப்பொழுது?

மீண்டும் மீண்டு வரும் மீனம்.. இவர்களின் பலம் பலவீனம் என்ன? அதிர்ஷ்டம் காலம் எப்பொழுது?

கும்பம்:

கும்பராசியில் பிறந்தவர்களுக்கு ஆறாம் அதிபதியாக சந்திரன் இருப்பதால் இவர்கள் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நல்ல வளர்ச்சி அடைய அம்மன் வழிபாடு செய்யலாம்.

அதிலும், குறிப்பாக இவர்கள் நாட்டார் குல வழக்கம் மற்றும் பாரம்பரிய முறைப்படி அம்மன் கோவில்களில் பால்குடம் எடுத்தல் தீமிதித்தல் அல்லது மஞ்சள் ஆடை உடுத்துவது போன்றவை சிறப்பான பலன்களை கொடுக்கும். இவர்களுக்கு கௌரி வழிபாடும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெற்றுக் கொடுக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியினருக்கு சந்திரன் ஜென்ம எதிரியாக இருப்பதால் இவர்கள் சந்திர பகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலக அம்மன் வழிபாடு மேற்கொள்ளலாம். இவர்கள் தினமும் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது இவர்களுக்கு மனக்குழப்பங்களை போக்கும்.

இவர்கள் மாதம் ஒருமுறை அல்லது நேரம் கிடைக்கும் போதெல்லாம் சமயபுரம் மாரியம்மன் தரிசனம் செய்வது மிகச் சிறந்த பலன்களை பெற்றுக் கொடுக்கும்.

அந்த வகையில், எல்லா ராசிகளுக்கும் அம்மன் வழிபாடு சிறந்த பலன்களை கொடுக்கும் என்றாலும் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அம்மன் வழிபாடு மிகப்பெரிய அளவில் ஆறுதலையும், வளர்ச்சியையும், பாதுகாப்பையும் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும், இது தொடர்பான பல்வேறு சந்தேகங்களை நாம் இந்த காணொளி பார்த்து தெரிந்து கொள்வோம்.   

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US