சனிக்கிழமை தவறியும் செய்யக்கூடாத 7 விஷயங்கள்.. மீறினால் கடும் பாதிப்பு உண்டாகுமாம்

By Sakthi Raj Jul 11, 2026 04:26 AM GMT
Report

சனிக்கிழமை சனிபகவானை வழிபாடு செய்வதற்கும் அவருக்குரிய பரிகாரங்கள் செய்வதற்கும் மிக உகந்த நாளாக இருக்கிறது. நீதிமானாக கருதக்கூடிய சனிபகவானுடைய அருள் கட்டாயம் எல்லோருக்கும் தேவை.

அப்பொழுதுதான் அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல மனிதனாக வாழக்கூடியவராகவும், சனி பகவானுடைய பாதிப்பிலிருந்து விலகி இருக்கக்கூடிய வாய்ப்பையும் அவர்கள் பெறுகிறார்கள். அப்படியாக, சனிக்கிழமை அன்று நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை பற்றி பார்ப்போம்.

சனிக்கிழமை தவறியும் செய்யக்கூடாத 7 விஷயங்கள்.. மீறினால் கடும் பாதிப்பு உண்டாகுமாம் | 7 Things Shouldnt Do Saturday To Get Sani Blessing

வீடுகளில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான 7 பாரம்பரிய வழிமுறைகள்

வீடுகளில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான 7 பாரம்பரிய வழிமுறைகள்

இந்து மத சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிழமைகளிலும் ஒவ்வொரு பொருட்கள் வாங்குவது அதிர்ஷ்டம் தருவதாக பார்க்கப்படுகிறது. அதேபோல், ஒவ்வொரு பொருட்களையும் குறிப்பிட்ட சில கிழமைகளில் வாங்கும் பொழுது நமக்கு அது துரதிஷ்டத்தையும் கொடுக்கக் கூடியதாக சொல்லப்படுகிறது.

1. சனி பகவானுக்கு உகந்த சனிக்கிழமைகளில் நாம் இரும்பு தொடர்பான பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இரும்பு என்பது சனி பகவானுடைய ஆதிக்கத்தை கொண்ட பொருளாகும்.

அதனால், இரும்பு தொடர்பான பொருட்களை அன்றைய நாள் கட்டாயம் வாங்குவதை தவிர்த்து விட வேண்டும். அவ்வாறு வாங்கினால் தேவையில்லாத சண்டைகள், குடும்பத்தில் பிரச்சினை மன அமைதியின்மை உருவாகும் என்று சொல்கிறார்கள். இருப்பினும் அன்றைய தினம் நாம் இரும்பு தொடர்பான பொருட்களை தானம் வழங்கலாம்.

ஒருவர் தீராத கடன் பிரச்சினையில் இருக்கிறார், பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார், சனிபகவான் பிடியில் அவர்கள் மிகுந்த பிரச்சினைகள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் சனிக்கிழமை இரும்பு தொடர்பான பொருட்களை தானம் செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

2. அதேபோல் சனிக்கிழமைகளில் தவறியும் எண்ணெய் வாங்க கூடாது. ஆனால், சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது தோஷங்களை போக்கும். சனி நீராடினால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. ஆனால் எண்ணெய் நாம் சனிக்கிழமை வாங்குவதற்கு உகந்த நாள் இல்லை.

சனிக்கிழமை தவறியும் செய்யக்கூடாத 7 விஷயங்கள்.. மீறினால் கடும் பாதிப்பு உண்டாகுமாம் | 7 Things Shouldnt Do Saturday To Get Sani Blessing

31 தானங்களும் பலன்களும்.. உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஆன்மீக ரகசியம்

31 தானங்களும் பலன்களும்.. உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஆன்மீக ரகசியம்

3.அதேபோல் உப்பை நாம் சனிக்கிழமை வாங்க கூடாது. மகாலட்சுமிக்கு உகந்த பொருளாக இருக்கக்கூடிய உப்பு நாம் வெள்ளிக்கிழமைகளில் வாங்குவதுதான் சிறப்பு பலனை பெற்றுக் கொடுக்கும். சனிக்கிழமையில் உப்பு வாங்குகின்ற பொழுது தொழில் மட்டும் வியாபாரம் செய்யும் பொழுது செய்பவர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று சொல்கிறார்கள்.

4. நாம் தவறியும் சனிக்கிழமைகளில் வீடுகளை சுத்தம் செய்யக்கூடிய பொருட்களை வாங்கக்கூடாது. அதேபோல் சனி பகவானுக்கு உகந்த பொருளான எள் வாங்க கூடாது. ஆனால், எள் எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் சனி தோஷம் நீங்கும் அதோடு சகல செல்வமும் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

5. இன்றைய நாள் மிக முக்கியமான தானமாக சுத்தமான காலனி செருப்புகளை செய்வது சிறந்தது. ஆனால் இந்த நாளில் நாம் இந்த பொருட்களை பரிசுகளாக பெற்று விடக்கூடாது. இதனால் எதிர்மறை சக்திகள் வீட்டிற்கு நுழையும் என்று சொல்லப்படுகிறது.

6. இந்த நாளில் சனி பகவானுடைய அருளை பெறுவதற்கு ஏழை எளிய மக்களுக்கு முதியவர்களுக்கு தானம் அழுது அவர்களுக்கு உதவி செய்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

7. சனிபகவானுடைய முழு அருளை பெற்று வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல சனிக்கிழமை கடுகு எண்ணெயில் தீபம் ஏற்றுவது சிறந்த பலன்களை பெற்றுக் கொடுக்கும். அதோடு சனிக்கிழமை அன்று வெகு தூர பயணம் செல்வதையும் தவிர்ப்பது நல்லது என்று சொல்கிறார்கள்.     


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US