ராகு தோஷம் விலகி கோடீஸ்வர யோகம் பெற செய்யவேண்டிய 4 பரிகாரங்கள்
ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதக்கூடிய ராகு பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக இருக்கிறார். இவர் சரியான இடத்தில் அமர்ந்திருக்கும் போது நிச்சயமாக ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெற்று கொடுக்கிறார்.
அதே சமயம் ராகு பகவான் அவருடைய எதிரி வீடுகளில் அமரும் பொழுது அந்த நபருக்கு வாழ்க்கையில் நிறைய தடைகளும் எதிர்மறையான தாக்கங்களையும் குழப்பங்களையும் கொடுக்கக்கூடிய நிலை இருக்கிறது.
அப்படியாக ஜாதகத்தில் ஒருவருக்கு ராகு தோஷம் இருக்கிறது என்றால் நிச்சயமாக வாழ்க்கை ரீதியாக பல்வேறு தடைகளை சந்திப்பார்கள். அந்த வகையில் ராகு தோஷம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய நான்கு எளிய சக்தி வாய்ந்த பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

பரிகாரங்கள்:
1. ஒருவர் ஜாதகத்தில் ராகு பகவான் 5, 7, 9 ஆம் வீடுகளில் அமரும் பொழுது அந்த நபருக்கு கல்வி, திருமணம், தொழில் போன்ற விஷயங்களில் ஒரு எதிர்மறை தாக்கத்தை கொடுக்ககூடும். இவர்கள் அவ்வப்போது உடல் ரீதியாக நிறைய தொந்தரவுகளும், தொழில் ரீதியாக வருமான சிக்கலும் சந்திப்பார்கள். இவர்கள் ராகு தோஷம் விலக ராகு பீஜ மந்திரத்தை ராகு காலத்தில் 108 முறை பாராயணம் செய்தால் நிச்சயம் மனரீதியாக ஒரு தெளிவும் மன அமைதியும் கிடைக்கும்.
2. ஜாதகத்தில் ராகு தோஷம் இருப்பவர்கள் தேங்காயை தானம் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் . அது மட்டும் இல்லாமல் தென்னை மரத்திற்கு இவர்கள் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வந்தாலும் நல்ல மாற்றம் காணலாம்.

3. ராகு தோஷம் இருப்பவர்கள் கட்டாயமாக உடலில் வெள்ளி ஆபரணங்கள் அணிந்து இருப்பது அவர்களுக்கு அந்த தோஷத்தினுடைய தாக்கத்தை குறைக்கும். முக்கியமாக ராகு தோஷம் இருப்பவர்கள் அம்மன் வழிபாடு மேற்கொண்டால் நிச்சயம் அவர்கள் தடைகளை எதிர்த்து போராடக்கூடிய சக்தி அவர்களுக்கு உண்டாகும்.
4. ராகு தோஷம் இருப்பவர்கள் முக்கியமாக செய்ய வேண்டிய ஒரு பரிகாரம் என்னவென்றால் தியானம் செய்து அவர்கள் பழக வேண்டும். தியானம் செய்ய தொடங்கும் பொழுது மன அமைதியும் மன குழப்பமும் விலகும். இதுவும் அவர்களுக்கு ஒரு பரிகாரமாக இருக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |