2025 ஆம் ஆண்டு கொடிகட்டி பறக்க போகும் 4 ராசிகள்-உங்கள் ராசி உள்ளதா?
ஜோதிட சாஸ்திரத்தில் ஒன்பது கிரகங்கள் குறித்தும் 12 ராசிகள் குறித்தும் 27 நட்சத்திரங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.இவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன.
இதனால் சில ராசிகள் சுப பலன்களையும் சில ராசிகள் அசுப பலன்களையும் பெறுகின்றன.அந்த வகையில் இந்த புத்தாண்டில் தனுசு மற்றும் மகரத்திற்கு இடையில் புதன் இடப்பெயர்ச்சி அடைவது, மீன ராசியில் சுக்கிரன் நுழைதல், மகர ராசியில் சூரியன் இடப்பெயர்ச்சி அடைவது உள்ளிட்ட குறிப்பிடத்தக்க கிரக பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளது.இதனால் இந்த வருடம் கொடிகட்டி பறக்க போகும் ராசிகள் யார் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசியினருக்கு ஜனவரி மாதம் மிகவும் சாதகமாக அமைய போகிறது.தொழில் வாய்ப்புகள் அமோகமாக இருக்கும்.சமுதாயத்தில் நீங்கள் நினைத்த இடத்திற்கு செல்வீர்கள்.வியாபாரத்திற்கான மேற்கொள்ளும் பயணம் வெற்றிகரமா அமையும்.பிரிந்து சென்ற உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு வேலையில் உயர்ந்த பதவிக்கு செல்ல போகிறார்கள்.ஆரம்ப காலத்தில் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள்.மிக பெரிய வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது.குழந்தை பாக்கியம்,திருமண வரன் எல்லா சுப காரியமும் தடை இன்றி நடக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியினர் இத்தனை நாள் தொழிலில் சந்தித்த கஷ்டங்கள் படிப்படியாக விலகி முன்னேற்ற பாதை உருவாகும்.புதிய முதலீடுகள் உங்களுக்கு லாபமாக அமையும்.குடும்பத்தில் பிரச்சனை விலகி சந்தோஷமாக அமையும்.அரசு அதிகாரிகளுக்கு பொற்காலம் இது.அலுவலகத்தில் உங்களுக்கான தனி மதிப்பு உண்டாகும்.மனதில் இருந்த பாரம் குறைந்து மகிழ்ச்சி பெருகும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு ஜனவரி மாதம் சிறந்த வாய்ப்புகளை அளிக்கும்.அலுவலகத்தில் நீங்கள் எதிர்பாரா வாய்ப்புகளும் பாராட்டுகளும் கிடைக்கும்.பிறரை பற்றி புரிந்து கொள்ள நல்ல சூழல் அமையும்.கணவன் மனைவி ஒற்றுமையாக அமையும்.உங்கள் மனதில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.உடல் ஆரோக்கியம் சீராகும்.நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |