இந்த தேதியில் பிறந்தவர்களிடம் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டுமாம்
எப்படி நாணயத்திற்கு இரு பக்கங்கள் உள்ளதோ அதேபோல் தான் மனிதர்களிடத்திலும் நன்மை மட்டும் தீமையான குணங்கள் இருக்கிறது. அந்த வகையில் குறிப்பிட்ட ஒரு சில தேதிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கை கொடுத்த பாடத்தால் நிறைய எதிர்மறையான எண்ணங்களோடும் சிந்தனைகளோடும் இருப்பார்களாம். அதனால் இவர்களிடம் பழகுவது சற்று கடினம் என்றும் கவனமாக இருக்கும் என்று சொல்கிறார்கள். அவர்கள் எந்ததேதியில் பிறந்தவர்கள் என்று பார்ப்போம்.

எண் 4:
இந்த தேதியில் பிறந்தவர்கள் ஒரு நிலையான மனநிலை கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள். எப்பொழுதும் வாழ்க்கையில் ஒரு சில குளறுபடிகளை இவர்கள் உருவாக்கி கொண்டே இருப்பார்கள். ஆதலால் இவர்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் ஒரு துன்ப நிலையில் இருப்பதை நாம் பார்க்கலாம்.
எண் 8:
இந்த தேதியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சமுதாயத்தில் மிகவும் பண பலம் படைத்த மனிதனாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆதலால் எப்பொழுதும் இவர்களுக்கு பணத்தைப் பற்றிய சிந்தனை இருந்து கொண்டே இருக்கும். அதனால் இவர்கள் உணர்வுகளுக்கு அவ்வளவாக முன்னுரிமை கொடுக்க மாட்டார்கள்.
எண் 13:
இந்த தேதியில் பிறந்தவர்கள் நிறைய வாழ்க்கை பாடங்கள் இருந்திருக்கும். கஷ்டத்தை மட்டுமே பார்த்த இவர்கள் மனமானது நல்லதை நோக்கி செல்வதில் ஒரு சில சிரமங்களை சந்திக்கிறது. ஆதலால் இவர்களுடன் பழகுவதில் நிறைய சிக்கல்களை நெருங்கியவர்கள் சந்திக்கிறார்கள்.
எண் 16:
இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு எப்பொழுதுமே தான் என்ற ஒரு அகங்காரம் இருக்கும். ஆதலால் இவர்கள் சொல்வது தான் சரி என்று எல்லா இடங்களிலும் பதிவு செய்து கொண்டிருப்பதால் இவரிடம் பேசுவதற்கே சில நேரங்களில் பலருக்கும் ஒரு வெறுப்பு உண்டாகும். குறிப்பாக காதல் வாழ்க்கையில் இவர்களுக்கு எப்பொழுதும் சிக்கலே இருக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |