வாஸ்து: இரவு நேரத்தில் ஒருபொழுதும் இந்த 4 பொருட்களை திறந்து வைக்காதீர்கள்.
நம்முடைய வாழ்க்கை முறையில் வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றி நடக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. மேலும், நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் எந்த ஒரு விஷயங்கள் தொடங்குவதாக இருந்தாலும் சரியான நேரம் பார்த்து சரியான வாஸ்து விதிகளை பின்பற்றி நாம் செய்கின்றோம். காரணம், இவ்வாறான விதிகளை பின்பற்றும் பொழுது நமக்கு ஏற்படுகின்ற துன்பத்திலிருந்து நாம் விடுபடலாம் என்று நம்பிக்கை.
அப்படியாக, ஒருவர் வீடுகளில் வாஸ்துரீதியாக சில விஷயங்களை பின்பற்ற வேண்டியது அவசியமாக இருக்கிறது. அவ்வாறு பின்பற்றும் பொழுது நிச்சயம் அவர்கள் வீடுகளில் சொல்லக்கூடிய எதிர்மறை ஆற்றல் நீங்குவதோடு மகாலட்சுமியின் பரிபூர்ண அருளும் கிடைக்கிறது.
அப்படியாக, நம்முடைய வீடுகளில் தவறியும் இரவு நேரங்களில் இந்த ஐந்து விஷயங்களை திறந்து வைக்க கூடாது என்று சொல்கிறார்கள் அதை பற்றி பார்ப்போம்.

1.வீடுகளில் துடைப்பம் என்பது மகாலட்சுமியின் அம்சத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. ஆக, இரவு நேரம் தானே என்று எண்ணி துடைப்பத்தை நாம் கண்ட இடங்களில் போட்டு வைப்பது கூடாது. அதற்குரிய இடங்களில் வைத்து அதனை மூடி வைப்பது அவசியம் ஆகும்.
2. முடிந்தவரை இரவு நேரங்களில் அன்றைய நாள் பொழுதில் மீதம் இருக்கக்கூடிய அழுக்கு பாத்திரங்களை கழுவி வைத்து விடுவது நல்லது. காரணம் காலை பெண்கள் எழுந்தவுடன் நேரடியாக செல்லக்கூடிய ஒரு இடமாக சமையலறை உள்ளது.
நேராக கண் விழிக்கும் பொழுது அழுக்கு பாத்திரங்களில் கண் விழிப்பது அவ்வளவு நல்ல சகுனமாக கருதப்படுவதில்லை. ஆதலால், முடிந்த வரை இரவு நேரங்களில் பாத்திரத்தை சுத்தம் செய்து வைப்பது உடல்நலத்திற்கும் வீட்டிற்கும் நல்ல அதிர்வலையை கொடுக்கும்.

3. இரவு நேரங்களில் தானியங்கள் பால் அல்லது வேற எந்த ஒரு உணவுப் பொருட்களையும் நாம் திறந்து வைக்கக் கூடாது. இதற்கு காரணம் இரவு நேரங்களில் கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் நடமாடக்கூடும்.
அது உணவுகளில் விழுந்து மறுநாள் காலை அதை நாம் உண்ணும் பொழுது நம்முடைய ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படலாம். அதோடு உணவுகளை நாம் திறந்து வைப்பது என்பது உணவை அவமதிப்பதற்கு சமம் ஆகும்.
4. வாஸ்து சாஸ்திரத்தில் தண்ணீர் மிகவும் பாசிட்டிவ் எனர்ஜியோடு தொடர்புடையதாக இருக்கிறது. ஆதலால் இரவு நேரங்களில் தண்ணீர் நிரம்பிய எந்த ஒரு பாத்திரத்தையும் திறந்து வைத்தல் கூடாது.
மேலும், தண்ணீர் திறந்து இருக்கும் பொழுது அதில் நிறைய கொசுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் தங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது . அதனால் உடல் நலத்திற்கு பல தீங்குகள் உருவாகக்கூடும் என்பதால் தண்ணீரை திறந்து வைப்பது நல்லது அல்ல.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |