தவறியும் வீடுகளில் இந்த 4 இடங்களில் பணத்தை வைக்காதீர்கள்.. பண சிக்கல் வருமாம்
ஜோதிட ரீதியாக வாஸ்து மிகவும் முக்கியமாக இருக்கிறது. அந்த வகையில் நமது வீடுகளில் ஒரு சில பொருட்களை ஒரு சில இடத்தில் வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரப்படி சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வகையில், பணத்தை தவறியும் இந்த 4 இடங்களில் வைக்க கூடாதாம். இதனால் பொருள் இழப்பு, பண சிக்கல் வருமாம். அதை பற்றி பார்ப்போம்.
1.வீடுகளில் பணத்தை எப்பொழுதும் இருள் சூழ்ந்து இருக்கக்கூடிய இடங்களில் வைக்க கூடாது. அதாவது, எப்பொழுதும் பூட்டியே இருக்கக்கூடிய அறைகளில் பணம் வைப்பது தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.
2. அதேபோல் குளியல் அறைஅருகில் பணத்தை வைக்கக் கூடாது. இது நமக்கு ஒரு விதமான எதிர்மறையான தாக்கங்களை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

3. அதேபோல் பணம் வைத்திருக்கக்கூடிய இடத்திற்கு அருகில் துடைப்பம் போன்றவற்றை வைக்கக்கூடாது.
4. நீங்கள் பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்று நினைக்கின்ற பொழுது உங்களுக்கென்று தனியாக ஒரு பொருள் வாங்கி அதில் சேமித்து வையுங்கள். யாரேனும் உங்களுக்கு பரிசு பொருட்களை கொடுத்தார்கள் என்றால் அதன் அருகில் பணத்தை வைப்பதை தவிர்ப்பது நல்லது. அவ்வாறு செய்யும் பொழுது பொருளாதார நெருக்கடிகள் வருமாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |