2025 ஆம் ஆண்டு லட்சமி தேவியின் அருளால் கோடீஸ்வர யோகம் பெரும் ராசிகள்
மனிதனாக பிறந்தால் கண்டிப்பாக அவனுக்கு பணம் முக்கிய தேவையாக இருக்கும்.அந்த பணம் சம்பாதிக்க எவ்வளவு கஷ்டம் என்று நாம் அனைவரும் அறிவோம்.ஆனால் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அந்த பணம் நம் கையில் தங்குவதில்லை.
பணம் சம்பாதிக்கவும் பணம் கையில் தங்கவும் இறைவனின் அருள் தேவை.ஒருவருக்கு செல்வம் சேர வேண்டும் என்றால் கண்டிப்பாக மஹாலக்ஷ்மியின் அருள் தேவை.அப்படியாக லட்சுமி தேவியின் அருளால் 2025 ஆம் ஆண்டு சில ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் உருவாகும்.அதை பற்றி பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு 2025 ஆம் ஆண்டு மிகவும் சாதகமான ஆண்டாக இருக்க போகிறது.இவர்களுக்கு இத்தனை கால வருடம் ஏற்பட்ட பண கஷ்டம் முற்றிலுமாக விலகும்.இவர்கள் தொட்டது எல்லாம் பொன்னாகும் காலம்.வசதிகளும், ஆடம்பரமும் அதிகரிக்கும். முன்னேற்றமே சந்திக்காத நபர்கள் அவர்கள் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியை சந்திப்பீர்கள்.வாங்கிய கடனை முழுமையாக அடைக்கும் வாய்ப்புகள் உருவாகும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு 2025 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பானதாக இருக்கப்போகிறது.இவர்களுக்கு இந்த ஆண்டில் நடக்கும் சனி பெயர்ச்சியால் ஏழரை சனியின் கடைசி கட்டம் அதோடு லட்சுமி தேவியின் பரிபூர்ண அருளும் அவர்களுக்கு கிடைக்க போகிறது.திடீர் என்று பண வரவு அதிர்ஷ்ட வாய்ப்புகள் இவர்களை தேடி வரும்.தொழில் வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபத்தை அடைவார்கள்.குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் உருவாக்கும்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு 2025 ஆம் ஆண்டில் லட்சுமி தேவியின் பரிபூரண அருளால் அவர்கள் நினைத்ததை சாதிக்க போகிறார்கள்.அத்துடன் சுக்கிரனின் ஆசியும் கிடைப்பதால் வற்றாத நிதி நிலை உருவாகும்.திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் சாந்தசோகமும் உருவாகும்.வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.வெளிநாடு வெளியூர் சுற்றுலா செல்லும் யோகம் உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |