செல்வம் பெருக மார்கழி முதல் நாள் செய்யவேண்டிய வழிபாடு
மார்கழி மாதம் இறை அருள் நிறைந்த மாதம்.மாதங்களில் நான் மார்கழி என்று பெருமாள் சொல்கிறார்.அவ்வளவு சிறப்பு வாய்ந்த மாதங்களில் நாம் ஆண்டாள் பாசுரம் பாடி 30 நாள் வழிபாடு செய்ய நினைத்த காரியம் நிறைவேறும் என்பது தவிர்க்க முடியாத உண்மை.
இன்னும் சிலர் கார்த்திகை மாதத்திற்கு பிறகு வரக்கூடிய மார்கழி மாதமும் பலரும் தங்களுடைய நிலை வாசலில் காலை நேரத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் வழக்கம் வைத்திருப்பார்கள்.அந்த வகையில் வீட்டில் ராஜயோகம் உண்டாக மார்கழி முதல் நாள் வீட்டில் செய்யவேண்டிய வழிபாட்டை பற்றி பாப்போம்.
பொதுவாக தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த நேரமாக திகழக்கூடியது தான் மார்கழி மாதம் என்றும்,அந்த நேரத்தில் தேவர்கள் அனைவரும் பூலோகம் வருவார்கள் என்றும் யார் அவர்கள் வருகை புரியும் நேரத்தில் எழுந்து குளித்து தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறார்களோ அவர்கள்இல்லத்தில் அனைத்து தேவர்களும் வந்து அருளாசி புரிவார்கள் என்றும் புராணங்கள் கூறுகின்றது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் வீட்டின் நிலை வாசலில் காலையில் தீபம் ஏற்றுவது என்பது அனைத்து தெய்வங்களையும் ஆகர்ஷணம் செய்வதற்கு இணையான ஒன்றாகவே கருதப்படுகிறது.
மேலும் மார்கழி மாதம் முழுவதும் தீபம் ஏற்ற முடியாது என்று நினைப்பவர்கள் கட்டாயம் முதல் நாள் அன்று தீபம் ஏற்றி வழிபாடு செய்ய அவர்களுக்கு சர்வ யோகமும் உண்டாகும்.தீபம் ஏற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் இந்த தீபம் ஏற்றி வழிபாடு செய்யவேண்டும்.
தீபம் ஏற்றும் முறை:
வீட்டு நிறை வாசலில் வெற்றிலையை வைத்து அதில் ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.இப்படி வீட்டு நிலை வாசலில் தீபம் ஏற்றிய பிறகு வீட்டு பூஜை அறைக்குள் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வது நமக்கு வீட்டில் சுபயோகம் உண்டாக்கும்.இவ்வளவு எளிமையான இந்த வெற்றிலை தீபத்தை முழுமனதோடு மனதார வேண்டிக்கொண்டு வீட்டு நிலை வாசலில் மார்கழி மாதத்தின் முதல் நாள் ஏற்ற அனைத்து தெய்வங்களின் அருள் பெறுவதோடு வீட்டில் ராஜ யோகம் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |