தோஷம் விலக வேண்டுமா?ராமர் வழிபாடு செய்த இந்த கோயிலுக்கு ஒருமுறை போயிட்டு வாங்க
உங்களுக்கு தோஷம் இருக்கா..இல்லனா ரொம்ப காலமா உங்க முன்னோர்களுக்கு நீங்க தர்ப்பணம் பண்ணாம இருக்கீங்களா.அதனால பித்ரு தோஷம் ஏற்பட்டிருக்கா? நவபாஷாண கோயில் பற்றி நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா.
பித்ரு தோஷம் உட்பட பல தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் தேவிபட்டினம் அருள்மிகு நவபாஷாண நவகிரக திருக்கோயிலுக்கு ஒருமுறை போயிட்டு வாங்க. எல்லா தோஷமும் உங்கள விட்டு போயிடும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோயிலை பற்றி இப்போ நாம முழுசா தெரிஞ்சுக்கலாம்.
தல அமைவிடம்:
நவபாஷாண நவகிரக கோயிலானது ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் தேவிபட்டினம் என்கிற ஊரின் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு நீங்க செல்லணும்னா ராமநாதபுரம் நகரிலிருந்து பேருந்து, வேன் மூலமா போகலாம். இந்த கோயிலானது ராமமேஸ்வரத்திலிருந்து 77 கி.மீ. தொலைவிலும், ராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
தல வரலாறு:
ராமாயணம் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதில் சீதை ராவணனால் கடத்தி செல்லப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டார். அவரை மீட்டு செல்ல வந்த ராம பகவானுக்கு ஏற்பட்ட சனி தோஷத்தை நீக்கும் விதமாக தேவிபட்டினம் கடற்கரையில் அமர்ந்து அங்கிருந்த மணலில் ஒன்பது பிடி எடுத்து பிரதிஷ்டை செய்தார்.
அந்த ஒன்பது கற்கள் ‘நவபாஷாணம்’ என்ற பெயரில் நவக்கிரகங்களாக வழிபடப்பட்டு வருகிறது. இந்த ஒன்பது கிரகங்களும் கடலுக்குள் இருக்கின்றன என்பது ஆச்சரியமளிக்கும் தகவலாகும்.
தலத்தின் தொன்மை:
தேவிப்பட்டினம் நவபாஷாண நவகிரக திருக்கோயிலில் ஸ்ரீ ராமரே வழிபட்டுள்ளதால் கோயிலின் தொன்மையை குறிப்பிட்டு சொல்ல இயலவில்லை. ஆனால் குறைந்தது 2000 வருடங்களுக்கும் மேலாக கடலினுள் இந்த நவகிரக கோவில் உள்ளது என்றும்,பல நீண்ட காலமாக பக்தர்கள் இங்கு வந்து அவர்களின் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தல சிறப்பு:
கடலுக்குள் இருக்கும் நவக்கிரக மண்டபமே தேவிபட்டினம் ஆகும். நமது முன் ஜென்ம பாவங்களை நீக்கி முன்னோர்களின் ஆசியைப் பெற இந்த தலம் உதவுகிறது. நவக்கிரகங்கள் உள்ள இந்த தலத்தில் நீராடினால் அதிக அளவிலான புண்ணியம் வந்து சேரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
இந்த ஒன்பது கிரகங்களிலும் நவதானியங்கள் வைத்து வழிபட்டால் சகல பலன்களும் கிடைக்கும் என்பது நீண்டகால நம்பிக்கையாக உள்ளது. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அவரது கைகளால் பிரதிஷ்டை செய்த நவகிரகங்கள் இங்கு அமைந்துள்ளன.
இவற்றிற்கு நவபாஷாண சக்தியிருப்பதால் இவை ‘நவபாஷாண நவகிரகங்கள்’ என அழைக்கப்படுகின்றன. இங்கு ராமபிரானுக்கு சனி தோஷம் நீங்கியதோடு சிவன், பார்வதி தேவியின் காட்சி கிடைத்துள்ளது. அவர்களின் ஆசிகளுடன் ராவணனுடனான போரில் ஸ்ரீ ராமர் வெற்றி பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது.
தல வழிபாடு:
இங்கு அமைக்கப்பட்டுள்ள நவகிரகங்களுக்கும் நீங்களே உங்கள் கைகளால் அபிஷேகம், ஆராதனை செய்ய முடியும். இக்கோயிலின் கடல் தீர்த்தத்தில் நீராடி இங்கிருக்கும் நவகிரகங்களுக்கும் நவதானியங்கள் சமர்ப்பித்து, ஒன்பது முறை வலம் வந்து வழிபட்டு, அன்னதானம் போன்ற தானங்களை செய்தால் “பிரம்மஹத்தி தோஷம், பித்ரு தோஷம்” போன்றவை நீங்கி விடும்.
தை, ஆடி, மகாளய அமாவாசை தினங்களில் ஸ்ராத்தம், தர்ப்பணம் போன்றவற்றை நீங்கள் இந்த தலத்தில் கொடுத்தால் நன்மையான பலன்களை பெற முடியும். ஆடி அமாவாசை தினத்தன்று இக்கோயிலில் பித்ரு கடன்களை செலுத்த லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர்.
கோயில் நேரம்:
கோயில் நடை திறந்திருக்கும் நேரம் எல்லா நாட்களிலும் அதிகாலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை கடலில் நீராடி இங்கிருக்கும் நவகிரக நாயகர்களை நீங்கள் வழிபடலாம் என்பதோடு ஸ்ரீ ராமர் பாதம் பட்ட இடங்களையும் நீங்கள் கண்டு தரிசிக்கலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |