சனிப்பெயர்ச்சி 2025: எந்த 4 ராசியினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
மார்ச் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக இருக்கிறது.அதாவது இந்த மார்ச் மாதத்தில் சந்திர கிரகணம் சூரிய கிரகணம் நடைபெற உள்ளது.அதோடு மார்ச் மாதத்தில் தான் சனி பெயர்ச்சியும் நடக்க உள்ளது.இதில் என்ன ஒரு விஷேசம் என்றால் சூரிய கிரகணமும் சனி பெயர்ச்சியும் ஒரே நாளில் நடக்க உள்ளது.
இதனால் பல ராசிகளுக்கு பல விதமான மாற்றம் கொடுக்கும்.இருந்தாலும் சனி பெயர்ச்சியால் சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.அவர்கள் யார் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசியினர் இந்த காலகட்டத்தில் தியானம் செய்வது நன்மை தரும்.காரணம் இவர்களுக்கு தேவை இல்லாத பிரச்சனை நிதி நெருக்கடிகள் செய்யாத குற்றத்திற்கு தண்டனை உருவாகும்.ஆதலால் கவனமாக கையாள்வது நன்மை தரும்.அதே போல் உடல் நலனில் அலட்சியமாக இருக்க கூடாது.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு மார்ச் 29 பிறகு சனியின் அசுர செல்வாக்கு இவர்கள் மீது தொடங்கும்.அதனால் இவர்கள் இந்த நேரத்தில் எந்த புதிய முயற்சியும் எடுக்க வேண்டாம்.புதிய வேலை தேடுபவர்களுக்கு ஏமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது .குடும்ப உறுப்பினர் உடல் நலனில் அக்கறை செலுத்துவது அவசியம்.
தனுசு:
தனுசு ராசிக்கு இந்த காலகட்டத்தில் சில சிக்கல் உருவாக வாய்ப்புள்ளது.செய்யும் காரியத்தில் வெற்றிகள் கிடைக்காமல் போகலாம்.நீதி மன்ற வழக்குகளில் சில எதிர்புகள் சந்திக்கலாம்.குழந்தைகள் திருமண வாழ்வில் சில சங்கடம் உருவாகும்.மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்:
மீன ராசிக்கு மிகவும் அசுப விளைவுகள் காத்திருக்கிறது.வாழ்க்கையில் மிக பெரிய சவாலை சந்திக்க நேரிடும்.மனதில் தேவை இல்லாத குழப்பம் சங்கடம் உருவாகும்.மனதில் தன்னம்பிக்கை குறையும்.எந்த ஒரு விஷயத்திலும் சரியான முடிவு எடுக்க முடியாமல் போகலாம்.திருமண வாழ்வில் சில சர்ச்சை உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |