காதலுக்காக எதையும் தியாகம் செய்யும் 4 ராசிக்காரர்கள்
சில ராசிகளில் பிறந்தவர்கள் காதலில் உண்மையானவர்களாக இருப்பார்கள்.
ஜோதிடத்தின்படி சில ராசியில் பிறந்தவர்கள் இயற்கையாகவே காதலில் மிகுந்த ஈடுபாடும், அசைக்க முடியாத உண்மையை வெளிப்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள். அத்தகைய ராசிக்காரர்கள் யார் என்று பார்த்தால்..

ரிஷபம்
இவர்கள் ஒரு முறை காதலித்து விட்டால் அதிலிருந்து பின்வாங்க மாட்டார்கள். இவர்களின் காதல் எந்தவித சுயநலமும் இல்லாமல் தூய்மையானதாகவும், ஆழமானதாகவும் இருக்கும். தங்கள் துணையுடன் வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.
கடகம்
இவர்கள் தங்கள் துணையையும், குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதை முதன்மை இலக்காக கருதுகின்றனர். தங்கள் காதலர்கள் ஒருபோதும் காயப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். காதலுக்காக எதையும் தியாகம் செய்ய தயங்க மாட்டார்கள்.
கன்னி
ஒரு முறை நம்பிக்கை வைத்து விட்டால் அதை கடைசி வரை காப்பாற்றுவார்கள். தங்கள் துணையின் வெற்றிக்காக தங்களின் கடின உழைப்பையும் வழங்குவார்கள். வாழ்க்கைத் துணையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பார்கள்.
மீனம்
காதலில் இவர்கள் மிகுந்த பரிவு, புரிதல் மற்றும் தியாக உணர்ச்சியை காட்டுவார்கள். தங்கள் துணையின் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். ஒருவரை காதலித்து விட்டால் இவர்களின் காதல் நிபந்தனையற்றதாகவும், நிரந்தரமானதாகவும் இருக்கும்.