இந்த 4 ராசிகளுக்கு எப்பொழுதும் சனிபகவான் அதிர்ஷ்டத்தை கொடுப்பாராம்

By Sakthi Raj Feb 27, 2026 08:23 AM GMT
Report

ஜோதிடத்தில் நீதிமானாக இருக்கக்கூடியவர் சனி பகவான். இவருடைய ஒவ்வொரு நகர்வும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை கொடுக்கும். மேலும் இவர் ஒரு மனிதன் செய்கின்ற பாவ புண்ணிய கணக்கில் தான் அவர்களுக்கு அருள் வழங்குவார் தவிர்த்து யாருக்கும் பாரபட்சம் பார்க்க மாட்டார்.

அப்படியாக மேலும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் தேதி சனி பெயர்ச்சி நிகழ இருக்கிறது. இதனால் ஒரு சிலர் ராசியினர் சனிப்பிடியில் இருந்து விடுபடுகிறார்கள். இருப்பினும் ஒரு சிலர் ராசியினர் சனியின் படியில் இருந்தாலும் அவர்களுக்கு பெரிய அளவில் தீய தாக்கங்களை சனி பகவான் கொடுக்க மாட்டார். அவர்கள் எந்த ராசிினர் என்று பார்ப்போம்.

இந்த 4 ராசிகளுக்கு எப்பொழுதும் சனிபகவான் அதிர்ஷ்டத்தை கொடுப்பாராம் | 4 Zodiac Who Will Get Blessings From Sanibagavan

ரிஷபம்:

ரிஷப ராசிக்கு சனிபகவான் தர்ம கர்மாதிபதி மற்றும் மிகச் சிறந்த யோகக்காரனாக இருக்கிறார். ரிஷப ராசியினரிடம் விடாமல் முயற்சி எப்போதும் இருக்கும்.

மேலும் சனி பகவான் இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் சோதனையை கொடுத்தாலும் அதை கடந்து செல்லக்கூடிய வலிமையையும் கொடுத்து இவர்கள் வாழ்க்கையில் மிக உயரத்திற்கு கூட்டி செல்கிறார்.

துலாம்:

துலாம் ராசியில் தான் சனி பகவான் உச்சம் அடையக்கூடிய வீடாக இருக்கிறது. சனி பகவான் தன்னுடைய முழு பலத்தையும் இந்த ராசியில் தான் செலுத்துகிறார். இதனால் இவர்களுக்கு எப்பொழுதும் நற்பலன் அதிகமாக இருக்கும்.

மேலும் துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். சனியும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள். துலாம் ராசியினர் இயல்பாகவே தர்மத்தோடு செயல்படக் கூடியவர்கள். அதனால் இவர்களுக்கு சனி பகவான் எப்பொழுதும் ஆசிர்வாதத்தை கொடுக்கிறார்.

இந்த 4 ராசிகளுக்கு எப்பொழுதும் சனிபகவான் அதிர்ஷ்டத்தை கொடுப்பாராம் | 4 Zodiac Who Will Get Blessings From Sanibagavan

மகரம்:

மகர ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். இந்த ராசியில் இயற்கையாகவே கடின உழைப்பாளிகள். இவர்கள் ஆடம்பரத்தை விரும்ப மாட்டார்கள். எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்புவார்கள்.

மேலும் இவர்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க கூடியவர்கள். சனி பகவானுக்கு ஒழுக்கம் மற்றும் எளிமை மிகவும் பிடித்தமான செயல் என்பதால் மகர ராசியினருக்கு சனி பகவானுடைய ஆசிர்வாதம் எப்பொழுதும் இருக்கிறது.

கும்பம்:

கும்ப ராசியின் அதிபதியும் சனி பகவான் தான். இது சனி பகவானுடைய சொந்த வீடாக இருக்கிறது. கும்ப ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அதிகம் கொண்டிருப்பார்கள். இந்த குணம் சனி பகவானுக்கு மிகவும் பிடித்தமான குணங்களில் ஒன்று.

மேலும் இவர்கள் சமூக நலனில் அக்கறை காண்பிப்பதிலும் ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்வதில் அதிகம் பங்கு கொள்வார்கள். அதனால் இவர்களுக்கு சனி பகவான் எப்பொழுதும் ஆசிர்வாதம் வழங்கி கைவிடமாட்டார். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US