வீட்டில் குலதெய்வம் குடிவர உதவும் 5 பொருட்கள்.., என்னென்ன தெரியுமா?
வாழ்வில் நினைத்ததெல்லாம் நடக்க குல தெய்வத்தின் ஆசீர்வாதம் நமக்கு முழுமையாக கிடைத்திருக்க வேண்டும்.
நம் குலத்திற்கே கஷ்டங்களும் ஏற்படாமல் பாதுகாத்து வர வேண்டும் என்று, முன்னோர்கள் காலம் காலமாக வழிபட்டு வரும் தெய்வம் தான் குலதெய்வம்.
முன்னோர்கள் காலகாலமாக வழிபட்டு வந்த குல தெய்வத்தை மறப்பது என்பது குடும்பத்திற்கு நல்லது அல்ல.
அந்தவகையில், வீட்டில் குலதெய்வம் குடிவர உதவும் 5 பொருட்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

1. மண்- குலதெய்வம் கோவிலுக்கு சென்று அங்கிருந்து எடுத்துவரப்படும் சக்தி வாய்ந்த மண்ணை வீட்டு வாசலில் துணியில் கட்டி வைத்தால் வீட்டில் குலதெய்வமே இருப்பது போன்ற சக்தியை தரும்.
2. எலுமிச்சை- குலதெய்வ கோவிலிலிருந்து எலுமிச்சை பழத்தை எடுத்து வந்து அப்படியே பூஜையறையில் வைக்கும்போது குலதெய்வத்தின் சக்தி நம் வீட்டில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
3. சாம்பல்- குலதெய்வம் கோவிலில் தீமிதிக்கும் பழக்கம் இருந்தால், அந்த சாம்பலை எடுத்து வருவது மிகவும் நல்லது என்று சொல்கிறார்கள்.
4. சந்தனம்- குலதெய்வம் சந்தனம் அணிந்திருந்தால் அதை எடுத்து வந்து வீட்டில் வைப்பதன் மூலம் குலதெய்வத்தை வீட்டிற்கும் குடிவைக்கலாம்.
5. தாலி சரடை- குலதெய்வத்திடம் தாலி சரடை வைத்து அர்ச்சனை செய்து அதை சுமங்கலி பெண்கள் அணிந்துக்கொண்டால் தீர்க்கசுமங்கலியாக இருக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |