மனித எலும்புகள் கல்லாகும் அதிசயம் கொண்ட சிவன் கோயில்
சிவபெருமான் அவன் அதிசயங்கள் பல நடத்தும் வித்தைக்காரன். அவனை வழிபாடு செய்ய தொடங்கினால் வாழ்க்கையில் நடக்கும் அதிசயங்களை கண்ணால் காண முடியும். அப்படியாக, கோயம்புத்தூரில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மேலசிதம்பரத்தில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம்.
இந்த ஆலயம் சுமார் 1000 ஆண்டுகாள் பழமையான ஆலயமாகும். பல்வேறு சிறப்பம்சம் பொருந்திய இந்த ஆலயம் இருக்கும் இடத்தை சுற்றி இன்றளவும் தொடர்ந்து 5 அதிசயங்கள் நடக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
இங்கு "நடராஜப்பெருமான்" ஆனந்த தாண்டவம் ஆடியபோது அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக ஒரு சில செய்திகளும் உண்டு. அப்படியாக, இந்த கோயிலில் பல ஆண்டு காலமாக 5 அதிசயங்கள் நடைபெறுகிறது. அவை நமக்கும் மேல் ஒரு இறை சக்தி இருக்கிறது என்று தீர்க்கமாக நம்பச்செய்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
1. இறவாத பனை:
இங்கு பல வருடமாக பனை மரம் ஒன்று இளமை மாறாமல் இருக்கிறது. இந்த மரத்திற்கு இன்று வரை இறப்பு ஒன்று நடக்கவில்லை என்று சொல்கிறார்கள். மேலும், இந்த பனை மரத்தின் பட்டையை இடித்து கசாயம் போட்டு குடித்தால், நமக்கு ஏற்பட்ட பல்வேறு வியாதிகள் குணமாவதாக சொல்லப்படுகிறது.
2. பிறவாத புளி:
இங்கு இருக்கும் புளிய மரத்தின் கொட்டைகள் பூமியில் போட்டால் மீண்டும் முளைப்பதே இல்லையாம். இந்த கொட்டைகள் மீண்டும் முளைக்க செய்யும் முயற்சிக்கு, வெளிநாடுகளில் இருந்து விஞ்ஞானிகள் வந்தும் அவை தோல்வி அடைந்ததாக சொல்லப்படுகிறது.
3. புழுக்காத சாணம்:
இந்த ஆலயம் அமைந்துள்ள "பேரூர்" எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு போன்ற கால் நடைகளின் சாணம் எத்தனை நாட்கள் ஆனாலும் அவற்றிலிருந்து புழுக்கள் உண்டாவதே இல்லை என்று சொல்ல படுகிறது.
4. எலும்புகள் கல்லாவது:
அதே போல், இந்த எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இறந்த மனிதர்களின் உடலை எரித்து, அதை நொய்யால் ஆற்றில் விடுகிறார்கள். பிறகு, ஆற்றில் விடுபட்ட எலும்புகள் சிறிது காலத்தில் கல்லாக மாறி கண்டெடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
5. வலதுகாது மேல்நோக்கிய நிலையில் மரணிப்பது:
5வது அதிசயமாக இந்த ஊரில் இறக்கும் மனிதர்கள் முதல் விலங்குகள் வரை, அவர்களுடைய வலது காதை மேல் நோக்கி வைத்தபடியே மரணமடையும் அதிசயம் இன்றளவும் நடத்தி கொண்டு இருக்கிறார் ஈசன் என்று சொல்லப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |