2026 சங்கடஹர சதுர்த்தி: மறந்தும் இந்த 5 தவறுகளை செய்து விடாதீர்கள்
ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வருகின்ற சதுர்த்தி திதியை சங்கடஹர சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். இந்த நாள் விநாயகப் பெருமானுக்கு உரிய மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது.
இந்த நாளில் நாம் விநாயகப் பெருமானை மனம் உருகி விரதம் இருந்து வழிபாடு செய்தால் நம் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய தடைகள் யாவும் விலகி வெற்றிகள் கிடைக்கும், செல்வ வளம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
அதாவது, சங்கடஹர சதுர்த்தியில் விரதமிருந்து வழிபாடு செய்தால் எப்பேர்பட்ட துயரமும் நீங்கும் என்பது நம்பிக்கை. இருப்பினும் அந்த தினத்தில் நாம் ஐந்து தவறுகளை செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.

சங்கடஹர சதுர்த்தியில் செய்யக் கூடாத 5 தவறுகள் :
1. துளசி படைக்கக் கூடாது :
நாம் விநாயகரை வழிபாடு செய்யும் பொழுது மறந்தும் அவருக்கு துளசி இலைகளை படைத்து வழிபாடு செய்யக் கூடாது.
காரணம் துளசி மிகவும் புனிதமானது என்றாலும் அது மகாலட்சுமி மற்றும் மஹா விஷ்ணு ஆகிய தெய்வங்களுக்கு படைத்து வழிபாடு செய்யக்கூடியது. ஆகையால் துளசிக்கு பதிலாக விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்தமான அருகம்புல்லை படைத்து நாம் வழிபாடு செய்யலாம்.
2. சந்திர தரிசனம் அவசியம் :
எப்பொழுதும் நாம் வழிபாடு செய்யும் பொழுது கடைபிடிக்கக் கூடிய விரதத்தை நிறைவு செய்வதற்கு ஒரு விதிமுறை உள்ளது. அப்படியாக, சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டினை நாம் சந்திரன் உதித்த பிறகே செய்ய வேண்டும்.
பக்தர்கள் விரதத்தை முடிப்பதற்கு முன்பாக சந்திர பகவானை தரிசித்து அவருக்கு தண்ணீரும், பாலும் படைத்து வழிபாடு செய்த பிறகே விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அந்த நாளில் சந்திர பகவானை தரிசிக்காமல் விரதத்தை நிறைவு செய்யும் பொழுது அந்த விரதமானது முழு பலனை நமக்கு தருவதில்லை என்று சொல்லப்படுகிறது.

3. அசைவ உணவுகள் கூடாது :
சங்கடஹர சதுர்த்தி தினத்தில் நாம் சாத்திவீகமான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். அதனால் அன்றைய தினத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து பூண்டு வெங்காயம் மது போன்றவற்றையும் உணவுகளில் சேர்க்காமல் இருப்பது நல்லது. இதனால் நம்முடைய மனதில் நேர்மறை ஆற்றல்கள் பெருகி ஆன்மீக பாதையில் செல்வதற்கான எந்த ஒரு தடையும் இல்லாமல் மனமும் உடலும் ஒத்துழைக்கிறது.
4. கருப்பு ஆடைகளை தவிர்க்கவும் :
சங்கடஹர சதுர்த்தி என்பது மிகவும் மங்களகரமான நாளாகும். அதனால் இந்த நாளில் நாம் கருப்பு நிற ஆடைகளை அணிவது அசுபமாக கருதப்படுகிறது.
மேலும் கருப்பு நிறம் என்பது சாஸ்திரங்கள் ரீதியாக எதிர்மறை ஆற்றலுடன் தொடர்புடையது என்பதாலும் கருப்பு நிற ஆடைகளை நாம் பொதுவாக வழிபாடுகளின் பொழுது தவிர்ப்பது நல்லது.
5. பகலில் தூங்குவது :
எந்த ஒரு விரதத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என்ற பொழுதும் பகல் நேரங்களில் தூங்குதல் கூடாது. மாலையில் தான் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு செய்ய வேண்டும் என்று பகல் நேரங்களில் தூங்குவதால் அந்த விரதம் நமக்கு முழு பலனை கொடுப்பதில்லை.
பகல் நேரங்களில் தூங்குவதால் எதிர்மறை ஆற்றல்கள் அதிகரிப்பதோடு நம்முடைய மனம் இறைவனை முழுமையாக சென்றடையாமல் ஒரு தடையை சந்திப்பதாக சொல்கிறார்கள். ஆகையால் விரதத்தின் பொழுது மனமும் உடலும் முழு நேரமும் இறைவனை நினைத்தபடி மந்திரங்களை பாராயணம் செய்வது அவசியம் ஆகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |