வாழ்க்கையில் விசேஷ தர்மத்தை கடைபிடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 5 நபர்கள்

By Sakthi Raj May 31, 2026 11:30 AM GMT
Report

நம்முடைய வரலாறுகளிலும் காவியங்களிலும் ஒரு சில கதாபாத்திரங்கள் நம் மனதில் நீங்காத இடம் பிடித்து இருப்பார்கள். காரணம், அவர்களுடைய நல்ல செயல்கள்.

எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம் என்கின்ற இடத்தில் அவர்கள் நான் இப்படித்தான் செயல்படுவேன் என்று தர்மத்தை காத்து நின்றதால் மட்டுமே அவர்கள் இன்றளவும் பேச கூடியவர்களாகவும் எல்லோருடைய மனதில் நீங்காத இடம் பிடித்தவர்களாகவும் இருக்கிறார்கள். அந்த வகையில் வாழ்க்கையில் விசேஷ தர்மத்தை கடைபிடித்து வாழ்ந்தவர்களை பற்றி பார்ப்போம்.

வாழ்க்கையில் விசேஷ தர்மத்தை கடைபிடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 5 நபர்கள் | 5 Most Unforgettable Person Who Followed Dharmas 

1.பரதன்:

தன் தந்தை மற்றும் தாயின் பேச்சுக்களுக்கு இடம் கொடுக்காமல் அவருக்கு அளிக்கப்பட்ட ராஜ்யத்தை மறுத்து அவனுடைய அண்ணன் ராமனுடைய பாதுகைகளை வைத்து அரசாண்டு விசேஷ தர்மத்தை அவர் கடைபிடித்தார். இதனால் நமக்கு பதவியை விட அவர் அண்ணனின் அன்பு தான் பெரிது என்று எடுத்துக்காட்டுகிறது.

2. விபீஷணன்:

தன்னுடைய சொந்த அண்ணனின் பாசத்தை விடவும் தர்மமே தலைசிறந்தது அதுவே நம்மை காக்கக்கூடிய கவசம் என்று எண்ணி இராவணனை எதிர்த்த அவருடைய விரோதியான ராமபிரானின் பாதங்களை பற்றி கொண்டவன்.

3. அர்ஜுனன்:

மகாபாரதப் போரில் பலம் பொருந்திய சேனைகள் அவனுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் வந்த பொழுதும் ஆயுதம் ஏந்தாமல் தனி ஒருவராக நின்ற கண்ணப்பிரானை அவருடைய பக்கம் ஏற்றுக்கொண்டார். இதனால் வெற்றி கிடைத்தது. இவை நமக்கு உணர்த்துவது சரியான நேரத்தில் சரியானதை தேர்ந்தெடுத்தால் மட்டுமே நமக்கு வெற்றி நிச்சயம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

வாழ்க்கையில் விசேஷ தர்மத்தை கடைபிடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 5 நபர்கள் | 5 Most Unforgettable Person Who Followed Dharmas

இந்த ராசியில் பிறந்தவர்கள் ஒருவரை தயங்காமல் காயப்படுத்திவிடுவார்களாம்

இந்த ராசியில் பிறந்தவர்கள் ஒருவரை தயங்காமல் காயப்படுத்திவிடுவார்களாம்

4. பிரகலாதன்:

தன்னுடைய தந்தையின் சொல்லை மீறி அந்த நாராயணனை பற்றிக்கொண்டு அவனுடைய நாமத்தின் நிலைநாட்ட தன்னுடைய தந்தையால் கொடுக்கப்பட்ட துன்பங்களைத் தாங்கிக் கொண்டு போராட தயாரானவன். அந்த சிறுவயதிலும் எது தர்மம் எது நம்முடைய ஆன்மாவை மேன்மைப்படுத்தும் என்று அறிந்து அவன் தேர்ந்தெடுத்த செயல் நம்மை சிந்திக்க தூண்டுகிறது.

5. ஆதிசங்கரர்:

இவர் தன்னுடைய தாய்க்கு சேவை செய்வதை விட இந்த உலகில் உள்ள மக்களுக்கு பரம்பொருளின் உண்மையை உணர்த்துவதே மிகப்பெரிய சேவை. அதுவே மேலான தர்மம் என்று துறவறம் கொண்டு மக்களுக்கு ஆன்மீக வழியாக நல்ல விஷயங்களை போதித்தார். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US