சிவபெருமான் உங்களுடன் எப்பொழுதும் இருக்கிறார் என்பதை உணர்த்தும் 5 அறிகுறிகள்
மனிதர்களுடைய கர்ம வினைகளை அடியோடு அழிக்கக்கூடிய வல்லமை பெற்றவர் சிவபெருமான். இவர் அவ்வளவு எளிதாக ஒரு மனிதனை ஆட்கொள்ள மாட்டார். அவர் ஒரு மனிதனை ஆட்கொண்டு அவர்களுக்கு சிவபெருமான் அருளை வழங்குகிறார் என்றால் அந்த நபர் வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்தைஅடையப் போகிறார் என்று அர்த்தம்.
சிவபெருமான் ஒரு மனிதனை ஆட்கொண்டு விட்டால் அவர்களுக்கு தாயாக, தந்தையாக அண்ணனாக, நண்பனாக என்று பல கோணங்களில் அந்த நபருடன் வாழ்க்கை பயணங்களில் அவர் பயணித்து அந்த நபரை பாதுகாப்பாக வைத்திருக்கக் கூடிய ஒரு அற்புதமான கருணைக்கடல் என்றால் அது நிச்சயமாக சிவபெருமானாக தான் இருக்கும்.
மேலும் சிவபெருமான் ஒரு மனிதனை ஆட்கொண்டு விட்டு அவர்களுடனே எப்பொழுதும் இருக்கிறார், அவர்களுக்கு சிவபெருமானுடைய ஆசிர்வாதம் எப்பொழுதும் இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்வதற்கு சில அறிகுறிகள் இருக்கிறது அதை பற்றி பார்ப்போம்.

1. சிவ சிந்தனை ஒருவருக்கு வந்துவிட்டது என்றால் அவருக்கு சிவபெருமானுடைய பொருட்கள் மீது அதிக ஆர்வம் வரத் தொடங்கும். அதாவது சிவபெருமானுடைய அம்சமாக கருதப்படும் ருத்ராட்சத்தை அவர்கள் அணிந்து கொள்ள வேண்டும் என்று விருப்பப்படுவார்கள். சிவபெருமானுக்கு மிகவும் விருப்பமான வில்வ இலைகளை கொண்டு சிவனுக்கு பூஜை செய்ய வேண்டும் என்று அவர்கள் ஆர்வம் கொள்வார்கள்.
நெற்றி நிறைய திருநீறு வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள். திருநீறு பார்க்கும் பொழுது அவர்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி உண்டாகும். இவ்வாறு சிவபெருமானுக்குரிய பொருட்கள் மீது அவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது என்றால் சிவபெருமான் அவர்களை கண்காணித்துக் கொண்டே இருக்கிறார் என்பதன் ஒரு அறிகுறி தான்.
2. அதேபோல் ஆன்மீக ரீதியாக நிறைய கனவுகள் வரத் தொடங்கும். எப்பொழுதும் இவர்களுக்கு இறை சிந்தனை மனதை ஆட்கொண்டு இருக்கும். கனவுகளில் கூட இவர்களுக்கு ஆலய ரீதியான கனவுகளாகவே வரும். பெரும்பாலான மனிதர்களுக்கு கனவுகள் என்பது ஆன்மீக ரீதியாக வருவது மிகவும் அரிது. சிவபெருமான் ஒருவரை ஆட்கொண்டு விட்டால் அவர்களுக்கு கனவு முழுவதும் சிவனுடைய அருளை உணர்வதற்கான கனவாகவே மட்டுமே அவர்களுக்கு இருக்கும்.

3. அதைப்போல் இவர்களுக்கு மந்திர ஒலிகள் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்கும். வெளியே சென்றாலும் "ஓம் நமசிவாய"என்ற மந்திரம் இவர்கள் காதுகளில் ஒலிக்கும். பார்க்கும் இடங்களில் எல்லாம் "ஓம் நமசிவாய" என்ற எழுத்துக்களும் இவர்களுக்கு கண்களில் தென்படுவதை நாம் காணலாம்.
அதோடு மிக முக்கியமாக சாதாரணமாக கடந்து போகும் பொழுது விபூதியின் வாசம் மலர்களின் வாசம் இவ்வாறான நல்ல பொருட்களின் தெய்வீகப் பொருட்களின் வாசத்தை இவர்கள் உணர முடியும்.
இவ்வாறான அமைப்புகள் ஒருவருக்கு இருக்கிறது என்றால் அவர்கள் அதிர்ஷ்டமான காலத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். சிவபெருமான் அவர்களுடன் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.
4. அதேப்போல் சிவபெருமான் ஆட்கொண்டு விட்டால் நமக்கு ஏற்படக்கூடிய எப்பேர்பட்ட பிரச்சனையும் தூசியாக போய்விடும். எங்கிருந்தோ நமக்கு உதவி செய்வதற்கு மனிதர்களை அவர் அனுப்பி வைப்பார். கடல் கடந்து கூட அந்த மனிதர் நம்மை காப்பாற்றுவதற்காக வரலாம். இவை எல்லாம் சிவபெருமானுடைய அருள் இருந்தால் மட்டுமே நடக்கும். நம்மை கஷ்டத்தில் துயரத்தில் அவர் நம்மை தவிக்க விட மாட்டார்.

5. மேலும், விலங்குகள் மீது முன்பை விட அதிக பிரியமும் அன்பும் கருணையும் உருவாகும். விலங்குகளும் நம்மிடத்தில் அவ்வளவு அன்பாகவும் ஆதரவாகவும் பழகுவதை நாம் காண முடியும். இதற்கு சிவபெருமானுடைய அருள் தான் காரணம் என்று நம் சொல்ல வேண்டும். சிவபெருமான் தான் அனைத்து உயிர்களுக்கும் தந்தை என்று நாம் போற்றி வழிபாடு செய்கிறோம். ஆதலால் இந்த உலகத்தில் இருக்கக்கூடிய மரம் செடி, கொடிகள் விலங்குகள் என அனைத்தும் நம்முடன் நட்பு பாராட்டுவதை நாம் உணர முடியும்.
இவை சிவபெருமானுடைய அருள் இருந்தால் மட்டுமே நடக்கும். இவ்வாறெல்லாம் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் நிகழ்கிறது என்றால் நீங்கள் சிவபெருமானுடைய வழி பாதையில் அவருடன் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். சிவபெருமான் கடைக்கண் பார்வை உங்கள் மீது பட்டு அவர் உங்கள் வாழ்க்கையை உயர்த்தி கொண்டிருக்கிறார் உங்களுடைய வாழ்க்கையை மோட்ச நிலைக்கு அழைத்துச் செல்கிறார்.
உங்கள் கர்ம வினைகளை அவர் அடியோடு அழிக்க உங்களுக்கு உதவியாக இருக்கிறார் என்பதை மனதில் வைத்துக் கொண்டு "ஓம் நமச்சிவாய" என்றும் மந்திரத்தை தினமும் நீங்கள் மறவாமல் உச்சரித்து வர உங்கள் வாழ்க்கையை கருணை கடலால் வளம் பெறும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |