நீங்கள் முற்பிறவியிலும் தீவிர முருக பக்தர் என்பதை உணர்த்தும் 4 அறிகுறிகள்
இந்த உலகத்தில் எந்த உயிரினத்தின் பிறப்பும் முற்பிறவியின் தொடர்ச்சி என்று நம்பக்கூடியதாக இருக்கிறது. அப்படியாக, நமக்கு பல நேரங்களில் நம்மை அறியாமல் ஒரு சில உணர்வுகள் நமக்கு வருவது உண்டு, அதாவது முன்பு அந்த இடத்திற்கு நாம் சென்று இருக்க மாட்டோம்.
ஆனால் முதல் முதலில் அந்த இடத்திற்கு செல்லும் பொழுது நமக்கு ஏற்கனவே அந்த இடத்திற்கு சென்றது போல் உணர்வு வரும். அதை போல் ஒருவரை பார்க்கின்ற பொழுது அவர்கள் நமக்கு முன்பு அறிமுகம் இல்லாதவராக இருந்தாலும் அவர்களுடன் ஏற்கனவே நீண்ட காலம் பழகியது போல் உணர்வை நமக்கு கொடுக்கிறது.

இவைகள் எல்லாம் முற்பிறவியின் தொடர்ச்சி என்று நம்முடைய ஆன்மீக ரீதியாக நம்பப்படுகிறது. அப்படியாக, கலியுக வரதனாக போற்றக்கூடிய முருகப்பெருமானை நம் முற்பிறவிகளிலும் தீவிரமாக போற்றி வழிபாடு செய்திருக்கின்றோம்.
அதனுடைய தொடர்ச்சி இந்த பிறவியிலும் தொடர்ந்து முருகப்பெருமான் நம்மை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
முற்பிறவியிலும் முருக பக்தர் என்பதை உணர்த்தும் 5 அறிகுறிகள் :
1.நீங்கள் முருகப்பெருமானுடைய அறுபடை வீடுகளுக்கு செல்லும் பொழுது முதன்முதலாக செல்வது போல் உங்களுக்கு தோன்றாது. ஏற்கனவே பலமுறை வந்தது போல் பழக்கப்பட்டதாக இருக்கும். அதைவிட நீங்கள் அந்த ஆலயத்திற்கு செல்லும் பொழுது உங்களுடைய வீட்டிற்கு செல்வது போல் நீங்கள் உணர்வீர்கள்.
2. அதேசமயம், கந்தபுராணம் கந்த சஷ்டி கவசம் திருப்புகழ் ஆகியவை நீங்கள் வெகு விரைவாக கற்றுத் தெரிந்து கொள்வீர்கள். எந்த துன்பத்திற்கு எந்த கவலைகளுக்கு எந்த திருப்புகழை படித்தால் தீர்வு கிடைக்கும் என்பது உங்களுக்கு இயற்கையாகவே தெரிந்திருக்கும்.

3. முருகப்பெருமானிடம் மிக எளிதாக அவருடன் உரையாடக்கூடிய அவரை உணரக்கூடிய பாக்கியம் கிடைத்திருக்கும். "முருகா" என்று நாமத்தை சொல்கின்ற பொழுது அவர் உங்கள் அருகில் நின்று உங்களுடன் பேசுவது போல் நீங்கள் உணருவீர்கள்.
4. எப்பொழுதும் முருகப்பெருமானுடைய அருள் உங்களை காப்பது போல் உணர்வில் இருந்து கொண்டே இருக்கும். அதைப்போல் முக்கியமான இடங்களுக்கு செல்லும் பொழுது முருகப்பெருமான் உடைய படங்கள் அவருடைய வாகனமான மயில் உங்களை பின்தொடர்வது போல் நீங்கள் உணர்வீர்கள். இவ்வாறான விஷயங்கள் அடிக்கடி உங்கள் கண்களுக்கு படுவதும் இயல்பாக இருக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |