இந்த தீர்த்தங்களில் நீராடினால் எப்பேர்ப்பட்ட தோஷமும் விலகுமாம்.. எங்கு தெரியுமா?
வாழ்க்கை என்பது நன்மை தீமை அறிந்து செயல்படக்கூடிய ஒரு பாடமாகும். அந்த வகையில் பலரும் அறியாத காலத்தில் பல்வேறு பாவங்களை செய்து விடுவார்கள். காலம் கடந்த பிறகு அவர்கள் செய்தது பாவம் என்று அறிந்த பிறகு அவர்களால் அதை தாங்கிக் கொள்ள முடியாது. அதற்கு தீர்வு காண வேண்டுமென்று விரும்புவார்கள்.
அவ்வாறு நினைப்பவர்கள் நிச்சயம் புனித தீர்த்தங்களில் நீராடும் பொழுது ஒரு நல்ல பலன் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் நம்முடைய பாவங்களும் விலகும். அப்படியாக எந்த ஊரில் இருக்கின்ற எந்த புனித தீர்த்தத்தில் நீராடினால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.

1.பிரம்ம தீர்த்தம்
சீர்காழி :
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் அமைந்திருக்கிறது புகழ்பெற்ற சட்டநாதர் கோவில். இங்கு பிரம்ம தீர்த்தம் இருக்கிறது. சித்திரை மாதத்தில் நடைபெறுகின்ற தீர்த்த வாரி திருவிழாவை பிரம்மதேவரே நேரில் வந்து நடத்துவதாக ஐதீகம். இந்த தீர்த்தத்தில் நீராடினால் சகல பாவங்களும் தோஷமும் விலகி மனத்தூய்மை அடையும்.
2. சங்கு தீர்த்தம்
திருக்கழுக்குன்றம் :
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குத்தில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் ஆலயம். இங்கு சங்க தீர்த்தம் இருக்கிறது. ஒருமுறை மார்க்கண்டேய முனிவர் இந்த ஆலயம் சென்று இறைவனுக்காக அபிஷேகம் செய்ய வேண்டும் என்று எண்ணிய பொழுது பாத்திரம் இல்லாமல் தவித்தார்.
அப்பொழுது இறைவன் அருளால் இந்த தீர்த்த குளத்தில் வலம்புரிச் சங்கு தோன்றியது. அந்த சங்கில் நீர் எடுத்து மார்க்கண்டேயர் ஈசனை வழிபட்டார். இந்த நிகழ்வின் காரணமாகவே "சங்கு தீர்த்தம்" என்ற பெயர் வந்தது. இங்கு நீராடினால் இழந்ததை எல்லாம் மீட்டுப் பெறலா.
3. நாழிக்கிணறு தீர்த்தம்
திருச்செந்தூர் :
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் மிகவும் புகழ்பெற்ற மற்றும் பிரசித்தி வாய்ந்த ஆலயமாகும். இங்கு தான் நாழிக்கிணறு தீர்த்தம் இருக்கிறது. அதாவது முருகப்பெருமா தன் வேலினால் உருவாக்கியதாக கூறப்படும் இந்த தீர்த்தம் என்றும் வற்றாத அதிசய தீர்த்தம் ஆகவே இருக்கிறது. இங்கு நீராடினால் உடல் ஆரோக்கியம் மற்றும் நோய்கள் எதிரிகள் தொல்லை விலகும் என்பது ஐதீகம்.

4. சர்வ தீர்த்தம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயில் அருகே அமைந்துள்ளது "சர்வ தீர்த்தம்". அம்பிகை மணலில் சிவலிங்கம் செய்து வழிபட்டபோது அவரை சோதனை செய்ய சிவபெருமான் அனைத்து நதிகளையும் வெள்ளமாக பெருக்கெடுக்க செய்தார்.
அதை கண்டு அஞ்சிய அம்பிகை சிவலிங்கத்தை ஆரத் தழுவிக்கொண்டார். அப்போது அனைத்து நதிகளும் ஒரே இடத்தில் சரண் அடைந்தது. இங்கு நீராடினால் நினைத்த காரியமும் நிறைவேறும் வாழ்க்கையில் சந்திக்கின்ற இன்னல்களும் விலகும்.
5. கல்யாண தீர்த்தம்
பாபநாசம் :
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் அமைந்திருக்கிறது பாபநாச சுவாமி கோவில். இங்கு கல்யாண தீர்த்தம் இருக்கிறது. கயிலையில் சிவபெருமானின் திருமணம் நடந்த போது தேவர்கள் அனைவரும் வடக்கில் ஒன்று கூடினார்கள்.
அதனால் பூமிகள் சம நிலையில் பாதிப்பு உண்டாகிறது. அதை சரி செய்ய அகத்திய முனிவர் தென் பகுதிக்கு வந்தார். அகத்தியரின் வேண்டுகோளின் படி இங்கு சிவபெருமான் அவருக்கு திருமண கோலத்தில் காட்சி கொடுத்தார். அதனால் இந்த தீர்த்தம் கல்யாண தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |