மகாளய பட்சம் என்பது பித்ருக்களுக்கு நாம் செய்யவேண்டிய கடமைகளை செய்யக்கூடிய அற்புதமான நாளாகும். அதாவது மகாளய பட்ச காலத்தில் தர்ப்பணம் சிரார்த்தம் தானங்கள் செய்வது எவ்வளவு முக்கியமோ அதேபோல் நாம் ஒரு சில விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்பது முக்கியமாக இருக்கிறது. அந்த வகையில் அன்றைய தினத்தில் ஒரு சில விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்கின்றார்கள். அதை பற்றி பார்ப்போம்.
மகாளய பட்சம் என்பது முன்னோர்களை வழிபாடு செய்வதற்கும் அவர்களின் ஆசிர்வாதங்களை பெறுவதற்கும் மிக முக்கியமான காலமாக அமைகிறது. மேலும் இந்த காலத்தில் பித்துருக்கள் பூமிக்கு வந்து நம்முடன் தங்கி நாம் செய்யும் தர்ப்பணங்களையும் சிரார்த்தங்களையும் தானங்களையும் அவர்கள் நேரடியாக பெற்றுக் கொண்டு நமக்கு ஆசிர்வாதம் வழங்குவதாக சொல்கிறார்கள்.
அதனால் மகாளய பட்சம் காலத்தில் குறிப்பிட்டு சில 5 விஷயங்களை நாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். அதை நாம் மீறி செய்யும் பொழுது நமக்கு சில எதிர்மறை தாக்கங்கள் உண்டாகுமாம். அப்படியாக, அன்றைய தினம் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.
1. நம் வீடுகளில் எப்பொழுதும் உடைந்த பொருட்களை வைத்திருப்பது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கக்கூடும். அதனால் மகாளய பட்ச காலத்தில் நம்முடைய வீடுகளில் உடைந்து பொருட்கள் மற்றும் கிழிந்த துணிகள் இருந்தால் அதை உடனடியாக அகற்றி விடுவது அவசியமாகும். இவ்வாறான பொருட்கள் நம் வீடுகளில் இருக்கும் பொழுது அவை நம் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற்று கொடுப்பதில் சில தடைகளை உண்டாக்குவதாக சொல்கிறார்கள்.
2. வீடுகளில் ஒரு பொழுதும் செடிகளுக்கு தண்ணீர் விடாமல் காய்ந்து விடும் அளவிற்கு வைத்திருக்கக் கூடாது. அவ்வாறு காய்ந்த செடிகள் வீடுகளில் இருந்தால் அவை உடனடியாக அகற்றி விடுவது அவசியமாகும்.
3. மகாளய பட்ச காலத்தில் கட்டாயமாக நம் முன்னோர்களின் திதி வரும் காலங்களில் சிரார்த்தம் தர்ப்பணம் ஆகியவை கொடுக்க வேண்டும். இதை கொடுக்காவிட்டால் நம்முடைய குடும்பங்களில் பல சிரமங்கள் உண்டாகலாம். அதனால் தர்ப்பணம் செய்வதை தவிர்த்து விடக் கூடாது.
4. மகாளய பட்ச காலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டாலும் எள்ளும் தண்ணீரும் மட்டுமாவது நாம் இறைக்கலாம். அவை முன்னோர்களின் ஆன்மாவை சென்றடைந்து நமக்கு ஆசிர்வாதத்தை பெற்றுக் கொடுக்கிறது.
5. மகாளய பட்ச காலத்தில்எதிர்மறையான விஷயங்கள் செய்தல் கூடாது. அதாவது வீடுகளில் குடும்பத்துடன் சண்டை போடுவதோ மோசமான வார்த்தைகள் பேசுதல் போன்ற விஷயங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் வழியாக நம் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெறுவதில் சில தடைகளும் தடங்களும் உண்டாகலாம்.
மேலும், மகாளய பட்ச காலத்தில் முன்னோர்கள் நம் வீட்டிற்கு வருகை தருவதாக சொல்கிறார்கள். அவ்வாறு அவர்கள் வரும் வேளையில் நம் குடும்பங்களில் சண்டைகள் இருப்பதை பார்த்தால் அவர்கள் மன சங்கடம் அடையும் நிலை உருவாகலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







