அட்சய திருதியை: அதிர்ஷ்டம் பெறுக தங்கத்திற்கு இணையாக வாங்க வேண்டிய 5 பொருட்கள்
இந்து மத பண்டிகைகளில் அட்சய திருதியை என்பது மிகவும் முக்கியமான மற்றும் விசேஷமான பண்டிகையாக இருக்கிறது. அதாவது, சித்திரை மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் மூன்றாவது நாளில் அட்சய திருதியை கொண்டாடுகிறோம். அப்படியாக, இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 20 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது.
புராணங்களில் அடிப்படையில் மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த பொழுது அவர்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்பதற்காக பாஞ்சாலி வேண்டுதலுக்கு அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரத்தை சூரிய பகவான் வழங்கி அருள் செய்ததாக சொல்லப்படுகிறது.
அதனால் இந்த தினத்தில் மகாலட்சுமி, குபேரர் ஆகியோரை வழிபாடு செய்வதோடு சூரிய பகவானையும் வழிபாடு செய்வது மிகச் சிறந்த பலனை கொடுக்கும். அந்த வகையில் இந்த 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி முருகப்பெருமானுக்கு உரிய கிருத்திகை நட்சத்திரமும் வருகிறது. ஆதலால் இந்த தினத்தில் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்வதால் பல நன்மைகளை பெறலாம்.

மேலும், அட்சய திருதியை என்பது பெருக்கத்திற்கு உரிய நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் நாம் எந்த ஒரு பொருள் வாங்கினாலும் அல்லது எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அவை பல மடங்கு உயரும் என்பது நம்பிக்கை.
அதனால்தான் இந்த தினத்தில் தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதும் சொத்துக்கள் சேர்ப்பதும் புதிய முதலீடுகள் செய்வதும் வண்டி வாகனங்கள் வாங்குவதும், புதிய தொழில் தொடங்குதல், மந்திரம் ஜபம் செய்வது, தானம் செய்வது யாகங்கள் வளர்ப்பது போன்ற விஷயங்கள் செய்வதை வழக்கமாக சிலர் வைத்திருக்கிறார்கள்.
ஆனால் எல்லோராலும் தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களோ வண்டி வாகனங்களோ சொத்துக்களோ புதிய முதலீடு செய்து வியாபாரம் தொடங்குவதோ போன்ற பணிகளில் ஈடுபட முடியாது.
ஆனால் அவர்கள் கவலைப்படாமல் தங்கத்திற்கு இணையான சில பொருட்களை வீடுகளில் வாங்கி வைத்து வழிபாடு செய்வதாலும் அவர்கள் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். அப்படியாக அட்சய திருதியை நாளில் வாங்க வேண்டிய ஐந்து முக்கியமான பொருட்களை பற்றி பார்ப்போம்.

1. அட்சய திருதியை நாளில் சமையலுக்கு தேவையான பாத்திரங்கள் வாங்குவதால் நம் வீடுகளில் அள்ள அள்ள குறையாத செல்வம் சேருகிறது.
2. மேலும், அட்சய திருதியின் நாளில் கடுகு வாங்குவது தங்கம் மற்றும் வெள்ளிக்கு இணையான மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது.
3. நம்முடைய வாழ்க்கையில் சந்திக்க கூடிய இன்பங்கள் பெறுகி மன அமைதி கிடைப்பதாக சொல்கிறார்கள்.
4. அன்றைய நாளில் மண் பானை, குடங்கள், விளக்குகள் போன்றவற்றை வீட்டிற்கு வாங்கி வருவதின் வழியாக செல்வ வளம் அதிகரிக்கிறது.
5. அட்சய திருதியை நாளில் வீடுகளில் பசு மாடுகள் வாங்கி வளர்ப்பதால் மகாலட்சுமி தேவியின் பரிபூரண அருளால் வீடுகளில் அமைதி உண்டாகும் என்பது நம்பிக்கை.
மேற்கண்ட, இந்த ஐந்து பொருட்களை தவிர அன்றைய தினம் மல்லிகைப்பூ, மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், அரிசி போன்ற மங்களகரமான பொருட்களையும் வாங்கி மகாலட்சுமி தேவிக்கு சமர்ப்பித்து வழிபாடு செய்யலாம்.
அதே போல் அன்றைய தினம் மகாலட்சுமி தேவிக்கு நெய் வேத்தியமாக பால் பாயாசம் செய்து படைப்பதும் மிகவும் விசேஷமானதாகும். அதோடு, வெள்ளை நிறம் என்பது சுக்கிர பகவானுக்கு உரியதாகும். அதனால் மகாலட்சுமி தேவியின் அருளை பெறுவதற்கு வெள்ளை நிற பொருட்கள் வாங்கி வைத்து வழிபாடு செய்வதும் சிறந்த பலனை கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |