சனிக்கிழமைகளில் தவறியும் செய்யக்கூடாத 5 விஷயங்கள்
சனிக்கிழமை என்றால் சனி பகவானுக்கு உரிய நாளாக இருக்கிறது. மேலும், நாம் சனி பகவானை வழிபாடு செய்ய சனிக்கிழமை பயன்படுத்திக் கொள்வது அவசியம். ஒருவர் வாழ்க்கையில் சனிபகவான் தான் மிகப்பெரிய அளவில் பாடத்தை கற்றுக் கொடுப்பவர்.
ஆதலால், அவர் நம்ம செய்யக்கூடிய தவறுகளுக்கு ஏற்ப தண்டனையையும் நன்மைக்கேற்ப சிறப்புகளையும் செய்வார். அந்த வகையில், சனிக்கிழமைகளில் தப்பித் தவறி செய்யக்கூடாது ஐந்து விஷயங்களை பற்றி பார்ப்போம்.

சனிக்கிழமையில் இரும்பு தொடர்பான பொருட்களை வாங்கவே கூடாது.
மேலும் சனிக்கிழமையில் எண்ணெய் நீராடலாம். ஆனால், ஒரு பொழுதும் எண்ணெய் வாங்க கூடாது.
சனிக்கிழமைகளில் ஒரு பொழுதும் தவறியும் உப்பு வாங்கி விடாதீர்கள். அப்படி, வாங்கினால் தொழில் ரீதியாக நஷ்டம் பொருளாதார இழப்புகள் வரலாம்.
சனிக்கிழமைகளில் துடைப்பம் உள்ளிட்ட வீடு சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருட்களையும் வாங்க கூடாது.
அதேபோல், சனிக்கிழமையில் எள்ளும் வாங்க கூடாது என்று சொல்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |