வாஸ்து: இந்த 5 பொருட்கள் உங்களிடம் இருந்தால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி
இந்த உலகத்தில் ஒரு சில விஷயங்கள் நமக்கு உண்மையாகவும், மாயையாகவும் இது எப்படி நடக்கிறது என்ற ஒரு ஆவலையும் தூண்டுகிறது. அதில் வாஸ்துவும் முக்கிய பங்கு வகிக்கும். காரணம், வாஸ்துரீதியாக நாம் இருக்கும் இடங்களில் சில மாற்றங்களை செய்யும் பொழுது படிப்படியாக நம்முடைய துன்பங்கள் விலகுவதை நாம் காணலாம்.
அந்த வகையில் ஒருவருக்கு வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் அவசியமாக இருக்கிறது. என்னதான் உழைத்தாலும் சிலருக்கு பணம் கையில் தங்குவதில்லை. ஒரு சிலருக்கு உழைக்கக் கூடிய பணம் கூட கைகளுக்கு வருவதில்லை.
இவ்வாறான நேரங்களில் நாம் உழைத்த பணம் நம் கையில் தங்கவும், நமக்கு சேர வேண்டிய பணம் சரியான நேரத்தில் வந்து அடையவும் செய்ய வேண்டிய சில வாஸ்து குறிப்புகளை பற்றி பார்ப்போம்.

1.சிட்ரின் கல்:
வாஸ்து ரீதியாக பணத்தை ஈர்க்கக்கூடிய ஒரு அதிர்ஷ்ட கல்லாக இவை விளங்குகிறது. இந்த கல்லை நம்முடைய பணம் வைக்கக்கூடிய இடங்களில் வைத்தால் நிச்சய அதிர்ஷ்டம் தேடி வரும் என்று சொல்கிறார்கள்.
2. பணப்பை:
நாம் எப்பொழுதும் பணம் வைக்கக்கூடிய பணப்பையை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தேவையில்லாத பழைய ரசீதுகளை நாம் பணப்பையில் இருந்து அகற்றி விட வேண்டும். அதேபோல் கிழிந்த மற்றும் அழுக்கான பணப்பை பொருளாதார பின்னடைவை கொடுக்கும்.
3. நாணயம்:
நம்முடைய நாட்டில் நிறைய கலாச்சாரங்களில் நாணயம் ஒரு அதிர்ஷ்டத்தின் சின்னமாக பார்க்கப்படுகிறது. அதனால் எப்பொழுதும் உங்களுடைய பணப்பை மற்றும் பணம் வைக்கும் இடங்களில் நாணயத்தையும் போட்டு வையுங்கள் .
இவை நிச்சயம் நம்முடைய பொருளாதாரத்தை பெற்றுக் கொடுக்கக் கூடிய அதிர்ஷ்டத்தை கொடுக்கும். நாணயங்களை நாம் எப்பொழுதும் அவமதிக்கக் கூடாது. ஒரு ரூபாயாக இருந்தாலும் அந்த நாணயத்திற்கான மதிப்பு கொடுத்து நாம் அதை சரியான இடங்களில் வைக்கும் பொழுது தான் பணமானது நம் கைகளில் தங்கும்.

4. தங்க நிறத்தில் பொருட்கள்:
வாஸ்துவில் தங்க நிறங்களில் இருக்கக்கூடிய பொருட்கள் நமக்கு அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் வீடுகளில் தங்க நிறங்களில் பொருட்களை வாங்கி வைப்பது நமக்கு நேர்மறை ஆற்றல் பெருக்கி பணவரவை அதிகரிக்கும்.
5. நறுமண பொருட்கள்:
அதேபோல் வீடுகளில் நாம் எப்பொழுதும் நறுமணமாக வைத்திருக்க வேண்டும். ஒரு நல்ல நறுமணம் வீடுகளை எப்பொழுதும் சூழ்ந்து இருக்கும் பொழுது நிச்சயம் எதிர்மறை ஆற்றல்கள் அவ்வப்போது விலகி பண கஷ்டம் நீங்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |