மகாலட்சுமியின் அருள் கிடைக்க பெண்கள் செய்ய வேண்டிய 6 தான தர்மங்கள் என்ன?
ஒவ்வொரு வீட்டினுடைய பெண்கள் தெய்வத்திற்கு சமமாக நாம் போற்றுகின்றோம். காரணம், ஒரு பெண் மனம் வைத்தால் தான் அந்த குடும்பம் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும்.
அந்த வகையில், பெண்கள் தங்களுடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய மகிழ்ச்சி நிலைக்கவும், செல்வ வளம் அதிகரிக்கவும், நிம்மதியான வாழ்க்கை கிடைக்கவும் அவர்கள் செய்ய வேண்டிய தான தர்மங்கள் என்னவென்று பார்ப்போம்.

1. பெண்கள் அன்னதானத்திற்கு காய்கறிகள் தானம் செய்வதால் அவர்களுக்கு வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.
2. பெண்கள் அரிசி தானம் செய்கின்ற பொழுது அவர்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
3. பெண்கள் தானியங்கள் தானம் செய்தால் வீடுகளில் குடும்பத்தினருடைய நவகிரக தோஷம் விலகும்.

4. பெண்கள் இயலாதவர்களுக்கு மருத்துவ செலவுக்காக தர்மம் செய்கின்ற பொழுது அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் புண்ணியம் சேரும். ஆரோக்கிய குறைபாடு விலகும்.
5. மேலும், வீடுகளில் அவசர தேவைக்காக தங்க நகைகளை அடகு வைக்கின்ற பொழுது நல்ல நேரம் பார்க்காமல் கட்டாயம் அடகு வைக்க கூடாது. இது மிகப்பெரிய அளவில் ஒரு இழப்புகளை ஏற்படுத்த கூடும் என்று சொல்லப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |