வீட்டில் செல்வம் நிலைத்திருக்க பின்பற்ற வேண்டிய முக்கிய 6 ஆன்மீக குறிப்புகள்
சில நேரங்களில் நம்முடைய முன்னேற்றம் நம்முடைய இருப்பிடம் பொறுத்து அமைகிறது. அப்படியாக, நாம் இருக்கும் இடம் சுத்தமாக மற்றும் ஆன்மீக ரீதியாக சில வழிமுறைகளை பின்பற்றி வைத்துக் கொள்ளும் பொழுது நம் வீடுகளில் மன அமைதியும் எதையும் சாதிக்கக்கூடிய திறமையும் வெற்றியும் கிடைக்கிறது.
அந்த வகையில் நம்முடைய வீடுகளில் துடைப்பதற்கு பாரம்பரிய ரீதியாக சில விதிமுறைகள் உள்ளது. அதை பின்பற்றி நாம் செய்யும் பொழுது வீடுகளில் மகாலட்சுமி எப்பொழுதும் நிலைத்திருப்பாள் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
1. நாம் வீடு துடைக்கும் பொழுது சூரிய உதயத்திற்கு முன்பு எப்பொழுதும் துடைப்பது நல்லது.
2. அதை போல் வியாழக்கிழமைகளில் முடிந்தவரை வீடு துடைப்பது தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பலரும் வெள்ளிக்கிழமை வீடு சுத்தம் செய்வதற்கு வியாழக்கிழமை தான் வீட்டை துடைக்கிறார்கள். அதை தவிர்ப்பது நன்மை தரும்.

3. ஏகாதசி நாளில் வீடுகள் துடைக்க கூடாது என்று சொல்லப்படுகிறது. சிலர் மதியம் 12 மணிக்கு மேல் மாலை நேரங்களில் வீடுகளை துடைப்பார்கள். அவ்வாறு செய்வதையும் தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
4. சனிக்கிழமைகளில் வீடு துடைக்கும் பொழுது உப்பு கலந்து துடைப்பது நல்ல பலன்களை கொடுக்கும்.
5. அதே போல் கற்பூரம் கலந்த நீரால் வீட்டை துடைப்பது நல்ல நறுமணமும் சுத்தமும் நேர்மறை ஆற்றலையும் கொடுக்கும் 6. ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் உப்பு தண்ணீர் கொண்டு வீடுகள் துடைப்பது தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |