இறந்தவர்களுக்கு செய்ப்படும் முக்கியமான 5 சடங்குகள் எதற்கு? காரணம் தெரியுமா

By Sakthi Raj Jul 04, 2026 01:19 PM GMT
Report

இந்த உலகத்தில் மனிதனுடைய உடலுக்கு மட்டுமே இறப்பு உண்டு. ஆனால் ஆன்மாவிற்கு இறப்பு கிடையாது. அப்படியாக, இந்து மதத்தில் இறந்தவர்களுக்கு ஐந்து முக்கியமான சடங்குகள் செய்யப்படுகிறது. பலருக்கும் இந்த சடங்குகள் ஏன் செய்கிறோம் என்று தெரிவதில்லை. அதை பற்றி பார்ப்போம்.

1. இறந்தவர்கள் மூக்கில் பஞ்சு வைப்பது ஏன்?

ஒருவர் இறந்துவிட்டார் என்றால் அவர்களுக்கு மூக்கில் பஞ்சு வைப்பதை பார்த்திருப்போம். அதற்கு காரணம் உயிர் பிரிந்தவுடன் உடலின் துவாரங்கள் வழியாக பிரபஞ்சத்தில் உள்ள அசுத்த காற்றுகள் அவர்கள் உடலுக்குள் சென்று உடலை வேகமாக அழுவதற்கான நிலைக்கு தள்ளிவிடும். அதை தடுப்பதற்காகவே இதை பின்பற்றப்படுகிறது.

2026 சனி வக்ர நிலை: ஜூலை 27 முதல் பிறர் பொறாமைப்படும் அளவு வாழப்போகும் 3 ராசிகள்

2026 சனி வக்ர நிலை: ஜூலை 27 முதல் பிறர் பொறாமைப்படும் அளவு வாழப்போகும் 3 ராசிகள்

2. இறந்தவர்கள் கால் கட்டைவிரலை கட்டுவது ஏன்?

மனிதன் உடலில் பிராண சக்தி வெளியேறக்கூடிய கடைசி வாசல் நம்முடைய பாதத்தின் கட்டைவிரல். உயிர் பிரிந்த பிறகும் எஞ்சி இருக்கும் அந்த காந்து அலைகள் வழியே வேறு ஏதேனும் தீய சக்திகள் உடலுக்குள் நுழையக்கூடாது என்பதற்காக பிரபஞ்ச மின்சுற்றை தக்க வைப்பதற்காகவும் இந்த ஆன்மீக கட்டு போடப்படுகிறது.

இறந்தவர்களுக்கு செய்ப்படும் முக்கியமான 5 சடங்குகள் எதற்கு? காரணம் தெரியுமா | Reason Behind 5 Hindu Funeral Rituals

3. இறந்தவர்களின் நெற்றியில் 1 ரூபாய் நாணயம் வைப்பது ஏன்?

இறந்தவர்கள் நெற்றியில் கட்டாயமாக ஒரு ரூபாய் நாணயம் வைப்பதை நாம் பார்த்திருப்போம். அதாவது நம்முடைய புருவம் மத்தியில் தான் ஆன்மாவின் முதன்மை சக்கரமான ஆக்ஞா உள்ளது.

இறந்த பிறகு உடல் குளிர்ந்து போகும் பொழுது அந்தச் சக்கரத்தின் வழியாக எஞ்சிய ஆற்றலை ஒரு உலோக நாணயம் கொண்டு பிடித்து அவர்களுடைய ஆன்மா மீண்டும் அந்த உடலுக்குள் நுழைய ஆசைப்படுவதை தடுக்க மற்றும் அந்த ஆன்மாவை மேல் நோக்கி பயணிக்க வைக்க கூடிய ஒரு வழிமுறையாகும்.

4. இறந்தவர்களின் வாயில் அரிசி (வாய்க்கரிசி) போடுவது ஏன்?

அது போல் இறந்தவர்களுடைய வீடுகளில் மிக முக்கியமாக செய்யக்கூடிய ஒன்று வாய்க்கரிசி. இது அவர்களுடைய பசியை போக்குவதற்காக அல்ல, இந்த மண்ணில் நீங்கள் உண்ட உணவு முடிந்து விட்டது. இனி இந்த உடலுக்கு எதுவும் தேவை இல்லை என்று அந்த ஆன்மாவிற்கு உணர்த்தக்கூடிய மற்றும் விடுதலை பெறுதல் நிகழ்விற்காக இந்த சடங்கு செய்யப்படுகிறது.

இறந்தவர்களுக்கு செய்ப்படும் முக்கியமான 5 சடங்குகள் எதற்கு? காரணம் தெரியுமா | Reason Behind 5 Hindu Funeral Rituals

இந்த 12 ராசிக்காரர்களால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்யவே முடியாதாம் என்ன தெரியுமா ?

இந்த 12 ராசிக்காரர்களால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்யவே முடியாதாம் என்ன தெரியுமா ?

5. இறந்தவர்களை எரிப்பதா? புதைப்பதா? எது சரியான முறை?

பொதுவாக, சித்தர்களும் ஞானிகளும் அவர்களின் உடலை இயற்கையோடு சேர்ப்பதற்கு விரும்புவார்கள், காரணம், அவர்கள் உடல் தியானத்தால் புனிதமடைந்தது என்பதால். ஆனால் சாதாரண மனிதர்களை எரிப்பதே மிகச் சரியானது என்று சொல்கிறார்கள்.

காரணம், மனிதன் அவருடைய உடலின் மீது அதிக பற்று வைத்துக் கொள்ள நேரலாம், உடலை புதைத்தால் ஆன்மா அந்த இடத்தையே சுற்றி வந்து கொண்டே இருக்கும். ஆனால் உடலை எரித்து நாம் சாம்பல் ஆக்கும் பொழுது நம்முடைய உடலான கூண்டு அழிந்துவிட்டது என்பதை ஆன்மா நேரடியாக பார்த்து உணர்ந்து அவர்கள் அடுத்த வாழ்க்கைக்கு பிரபஞ்சத்திற்கு தயாராகிறார்கள்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US