வாஸ்து: அதிர்ஷ்டம் உண்டாக வீடுகளில் வளர்க்க வேண்டிய 6 செடிகள்
வாஸ்து என்பது ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் முக்கியமானதாக உள்ளது. அதாவது நம்முடைய இருப்பிடத்தை வாஸ்துரீதியாக சரியாக அமைத்துக் கொள்ளும் பொழுது அந்த இடத்தில் அமைதியான நிலையும் செல்வ செழிப்பு கிடைக்கிறது.
அந்த வகையில் வாஸ்து ரீதியாக நிறைய பொருட்களும் செடிகளும் வீடுகளில் வளர்த்து வருவோம். அவ்வாறு வளர்க்கும் பொழுது வாஸ்து சமநிலை அடைகிறது. அப்படியாக, வீடுகளில் வாஸ்து ரீதியாக நாம் என்ன செடிகள் வளர்த்தால்? நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

1.வீடுகளில் வாடாமல்லி செடி வளர்த்து வரும் பொழுது நம்முடைய பொருளாதார உயர்ந்த நிலைக்கு செல்கிறது. குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சியான நிலையும் தீய சக்திகளை விரட்டக்கூடிய ஒரு ஆற்றலையும் அவை தருகிறது.
2. மல்லிகை பூ வீடுகளில் வளர்க்கும் பொழுது நம்முடைய மனதை அமைதி அடையச் செய்வதோடு நல்ல அதிர்ஷ்டத்தையும் அவை பெற்றுக் கொடுக்கிறது.
3. அதேபோல் வீடுகளில் செவ்வந்தி மலர் வளர்க்கும் பொழுது அவை செல்வ செழிப்பை குறிக்கிறது. அதுமட்டுமல்லாமல் வாஸ்துவை அவை சம நிலை செய்கிறது.

4. வீடுகளில் தொட்டா சிணுங்கி செடி வளர்க்கும் பொழுது அதை நம்முடைய வீடுகளில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
5. அதை போல் வீடுகளில் வெற்றிலை செடி வளர்க்கும் பொழுது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இது நம் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்று சொல்கிறார்கள்.
6. வீடுகளில் சங்கு பூ வளர்க்கும் பொழுது மன அமைதியும் ஆன்மீகத்தில் நல்ல வளர்ச்சியும் கிடைக்கிறது. மேலும் நம் வீட்டை சுற்றி ஒரு நல்ல அதிர்வலைகள் எப்பொழுதும் இருப்பதற்கான ஒரு அமைப்பை இந்த பூ கொடுக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |