2025 வியாழன் பெயர்ச்சி:புத்தாண்டை அமோகமாக கொண்டாடப்போகும் ராசிகள் யார்?
வருகின்ற 2025 ஆம் ஆண்டு வியாழன் தனது ராசியை மாற்றுகிறார்.வியாழன் பெயர்ச்சி மே 14, 2025 அன்று இரவு 11:20 மணிக்கு மிதுன ராசியில் நடைபெறுகிறது. 2025ல் வியாழன் மூன்று முறை சஞ்சாரம் செய்வது சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை கொடுக்க உள்ளது.
இதனால் அந்த ராசிக்காரர்கள் பொருளாதார வளர்ச்சி,படிப்பு,வேலை என அனைத்திலும் சிறந்து விளங்குவார்கள்.மேலும், வியாழனின் மிதுனம் சஞ்சாரம் எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்:
வியாழனின் இந்த ராசி மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பலனை கொடுக்க போகிறது.அதிர்ஷ்ட காத்து உங்கள் பக்கம் வீச போகிறது.வியாபாரத்தில் தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.சகோதரி வழியில் உங்களுக்கு ஏற்ற ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்:
வியாழனின் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நீண்ட நாள் எதிர்பார்த்த திருப்பத்தை கொடுக்க போகிறது.பல நாள் இவர்கள் சிக்கி கொண்டு இருந்த பிரச்சனை முடிவிற்கு வரும்.வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.உடல் ஆரோக்கியம் சீராகும்.
மிதுனம்:
வியாழனின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிக சாதகமாக அமைய போகிறது.பணி இடத்தில் உங்களுக்கு ஏற்ற மாறுதலை கொண்டு வருவீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும்.சொத்து விவகாரம் நல்ல முடிவிற்கு வரும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு குருவின் ஆசியால் ராஜ யோகம் காத்து இருக்கிறது.சொந்தமாக இடம் வாங்கி தொழில் செய்யும் யோகம் உருவாகும்.மாணவர்கள் நல்ல அறிவையும் பண்புகளையும் வளர்த்து கொள்வார்கள்.நீங்கள் செய்த முதலீடு லாபகரமாக அமையும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு வியாழன் சஞ்சாரம் திருமண வாழ்வில் நல்ல திருப்பத்தை கொடுக்கும்.முக்கியமான பொறுப்புகள் உங்களை தேடி வரும்.வியாபாரத்தில் உங்களுக்கு ஏற்ற மாறுதலை செய்வீர்கள்.சில நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளன.
கும்பம்:
வியாழனின் ராசி மாற்றம் கும்ப ராசிக்காரர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக அமையும்.மன கசப்புகள் உங்களை விட்டு விலகும்.நல்ல வரன் தேடி வரும்.பெற்றோரார்கள் ஆதரவாக இருப்பார்கள்.நீண்ட நாள் எதிர்பார்த்து காத்து இருந்த பணம் உங்களை வந்து சேரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |