60-‌ம் கல்யாணத்தில் அமைந்திருக்கும் சுவாரசியம் பற்றி தெரியுமா?

By Sakthi Raj Jul 26, 2024 07:00 AM GMT
Report

பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவைத்த பெற்றோர்களுக்கு,பிள்ளைகள் வயதான காலத்தில் 60ஆம் திருமணம் செய்துவைப்பது உண்டு.

அப்படியாக 60 ஆம் திருமணம் என்பது இப்பொழுது கலாச்சாரமாக மாறியதே தவிர 60 ஆம் கல்யாணம் ஏன் நடத்தி வைக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியாத கதை அதை பற்றி பார்ப்போம்.

அதாவது ஒருவர் பிறந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்து அடுத்து வரும் நாள் சஷ்டியப்த பூர்த்தி நாளாகும் . அன்றைய தினம் கிரகங்கள் அமைந்திருக்கும் நிலை அந்த நாளின் சிறப்பை உணர்த்துகிறது.

60-‌ம் கல்யாணத்தில் அமைந்திருக்கும் சுவாரசியம் பற்றி தெரியுமா? | 60Th Marriage Celebration Couples Ceremony

அதாவது அவர் பிறந்து 60 வருடங்கள் நிறை வடைந்த நாளிற்கு அடுத்த நாள், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்பு மற்றும் ஆண்டு, மாதம் ஆகியவையும் மாறாமல் இருக்கும். ஆயுளில் ஒரு பாகம் முடிந்து மறு பாகம் ஆரம்பி‌க்‌கிறது.

அன்று முதல் அவர் புதுப்பிறவி எடுத்து ஒரு ஆயுளை அவ‌ர் முடி‌த்து‌வி‌ட்டா‌ர் என்பதால் திரும்பவும் திருமணம் செய்து வை‌ப்பா‌ர்க‌ள். இதை 60-ம் கல்யாணம் என்றும், சஷ்டியப்தபூர்த்தி என்றும் கூறுகிறோம்.

பூமியில் நாம் பிறந்த நாளிலிருந்து ஒவ்வொரு நாளும், வருடமும் செல்லச் செல்ல நமது நிர்ணயிக்கப்பட்ட ஆயுட் காலம் குறைந்து கொண்டே போகிறது.

ஒவ்வொரு பிறந்த நாளிலும் இந்த விஷயத்தை நினைவின் கொண்டு ஒவ்வொரு வருடமும் நாம் இறைவனை நோக்கி முன்னேறுகிறோம் என்ற எண்ணம் வேண்டும். 60 வயதிற்குள் எல்லா ஆசைகளையும் அறவே நீக்கிய பிறகு தான் சஷ்டியப்த பூர்த்தி என்னும் 60வது பிறந்த நாளைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறோம்.

60-‌ம் கல்யாணத்தில் அமைந்திருக்கும் சுவாரசியம் பற்றி தெரியுமா? | 60Th Marriage Celebration Couples Ceremony

60வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற பிறகு தான், தனது என்ற பற்றையும் துறந்து தன்னுடைய மகன், மகள், சொந்த, பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து அனைவரும் தன் மக்களே, உற்றம், சுற்றமே என்ற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தியாக வேண்டும்.

அப்போது தான் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறோம் . 70வது வயதிலிருந்து நம்மை சுற்றியுள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும்.

ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும். சாதி, மத, இனம் , செடி, கொடி, மனிதன், விலங்கு, உயிருள்ளது, ஜடப் பொருள் அனைத்திலும் இறைவனை காணும் நிலையை 80 வயதில் பெறும்போதுதான் சதாபிஷேகம் ஏற்கும் தகுதி பெறுகிறோம்.

பக்தர்கள் பசி ஆற்றிய பிறகே நடை சாற்றும் கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

பக்தர்கள் பசி ஆற்றிய பிறகே நடை சாற்றும் கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?


சஷ்டியப்த பூர்த்தியன்று செய்யப்படும் பூஜையின்போது 64 கலசங்களில் தூய நீர் நிரப்பி, மந்திரங்கள் மூலம் நீரைப் புனிதப்படுத்தி அபிஷேகம் செய்வதின் காரணம் 64 கலசங்களும் 60 ஆண்டு தேவதைகளையும் அவற்றிற்கு அதிபதிகளாகிய அக்கினி, சூரியன், சந்திரன், வாயு ஆகியோரையும் குறிக்கும.

ஆணுக்கு 60 வயது நிறைவடைந்து 61 தொடங்கும்போது மணி விழாவும் , 71 வயது தொடங்கும் போது பவள விழாவும் , 81 வயது தொடங்கும்போது முத்து விழாவும் கொண்டாடப்படுகின்றன.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US