வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போடும் 6 ஆம் பாவம்..தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியம்
ஜோதிடத்தில் 12 கட்டங்கள் இருக்கின்றன. அது ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒவ்வொரு அமைப்பு உள்ளது. அப்படியாக, ஆறாம் பாவம் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
ஒருவர் ஜாதகத்தில் ஆறாம் பாவம் வேலை செய்ய தொடங்குகிறது என்றால் அவர்களுக்கு வாழ்க்கையில் பிடித்தது மட்டும் கிடைப்பதில்லை நம்முடைய குண நலன்களை அவை மாற்றத்து தொடங்குகிறது.
அதாவது ஆறாம் பாவம் என்றால் ஜோதிடத்தில் எதிரி கடன், நோய் மட்டுமில்லை அவை தான் ஒழுக்கம், உழைப்பு, புதுமை, சுயகட்டுப்பாடு போன்ற குணங்களை குறிக்கிறது.

ஆறாம் பாவத்தில் ஒருவருக்கு வக்கிர செவ்வாய் இருப்பவர்கள் வெளியில் இருக்கக்கூடிய எதிரிகளை ஜெயிப்பதை விட இவர்கள் உள்ளுக்குள் இருக்கின்ற கோபத்தை தான் முதலில் ஜெயிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
அதை போல், ஆறாம் பாவத்தில் புதன் பகவான் இருக்கிறார் என்றால் இவர்கள் எப்பொழுதும் பேசுகின்ற விதம் முடிவு எடுக்கின்ற விதத்தை கட்டாயம் சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதேபோல், ஆறாம் பாவத்தை வக்கிர புதன் அமைந்திருந்தால் தேவையில்லாத ஒரு விஷயத்தை எப்பொழுதும் மீண்டும் மீண்டும் போட்டு குழப்பிக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

ஒருவருக்கு ஆறாம் பாவத்தில் சனி பகவான் இருக்கிறார் என்றால் அங்கு ஒழுக்கம் பொறுமை தினம் தொடர்ந்து உழைக்கிற பழக்கத்தை இவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆறாம் பாவத்தில் வக்ரசனி இருக்கிறது என்றால் இவர்களுக்கு தாமதமாக வந்தாலும் மனம் தளராமல் இவர்கள் முயற்சி செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்.
ஆக, ஆறாம் பாவம் நமக்கு கற்றுக் கொடுக்கக்கூடிய முக்கியமான பாடம் நம்முடைய ஜாதகத்தில் எதிரிகள் எப்பொழுதும் வெளியே இல்லை நம்மிடம் தான் இருக்கிறார். அதை முதலில் நாம் வென்று விட்டால் மற்ற எல்லாவற்றையும் நாம் எளிதாக வென்று விடலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |