இந்த உலகம் நம்மை வியப்பில் ஆழ்த்தும் 7 விதமான ஆச்சரியங்கள் என்ன தெரியுமா ?

By Sakthi Raj May 20, 2026 01:00 PM GMT
Report

1. ஒரு மனிதன் அவன் மரணம் அடைவது நிச்சயம் என்று தெரிந்த பிறகும் அதைப் பற்றி அவன் கவலைப்படாமல், அவனுடைய கடமைகளை செய்யாமல் சிரித்துக்கொண்டு நேரத்தை கழிப்பது என்பது நமக்கு ஒரு வகையான ஆச்சரியத்தை கொடுக்கிறது.

2. எப்படியும் இந்த உலகம் ஒரு நாள் அழிந்து விடும். இருந்தாலும் மனிதனுக்கு இந்த உலகத்தின் மீது இருக்கக்கூடிய மோகம் குறையவே இல்லை. இது நமக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுக்கிறது.

3. இந்த உலகத்தில் நடக்கக்கூடிய எந்த ஒரு செயலும் இறைவன் விதித்தபடி நடக்கும் என்று நன்கு அறிந்த மனிதன் கைமீறி சென்ற காரியங்களை நினைத்து எப்பொழுதும் கவலை கொண்டிருப்பது நமக்கு முழு ஆச்சரியத்தை கொடுக்கிறது.

இந்த உலகம் நம்மை வியப்பில் ஆழ்த்தும் 7 விதமான ஆச்சரியங்கள் என்ன தெரியுமா ? | 7 Hard Truth About Human Life Iin Spiritual Life

27 நட்சத்திரத்திற்கு உரிய அதிர்ஷ்ட நிறம் மற்றும் மலர் என்ன தெரியுமா ?

27 நட்சத்திரத்திற்கு உரிய அதிர்ஷ்ட நிறம் மற்றும் மலர் என்ன தெரியுமா ?

4. மறுமை வாழ்க்கைக்கான தீர்வு இந்த உலகிலேயே இருக்கிறது என்று நம்புகின்ற மனிதன் தான் அதனைப் பற்றி சிறிதும் கவலை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பது நமக்கு வியப்பையும் ஆச்சரியத்தையும் கொடுக்கிறது.

5. எல்லா மனிதர்களும் நரக வேதனை பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள். இருப்பினும் அதைப்பற்றி சிறிது பயம் கூட இல்லாமல் சிந்திக்காமல் பாவமும் தவறும் செய்வது ஆச்சரியத்தை கொடுக்கிறது.

மனித வாழ்க்கையில் உள்ள 3 கர்ம வினைகள் என்ன தெரியுமா?

மனித வாழ்க்கையில் உள்ள 3 கர்ம வினைகள் என்ன தெரியுமா?

6. இந்த உலகத்தில் இறைவன் ஒருவனே என்று அறிந்த மனிதன் அவனைத் தவிர வேறு எவருக்கோ வணக்கம் செய்து அவர்களை உயர்நிலையில் வைத்து மதித்து போற்றுவது நமக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது.

7. இறந்த பிறகு நரகம், சொர்க்கம் என்று நன்கு அறிந்த மனிதர்கள் உலக செல்வங்களை சேர்த்து வைப்பதில் முழு வாழ்க்கையும் கழித்து விடுவது நமக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுக்கிறது.

ஆக, இறுதியில் மனிதர்கள் பல நேரங்களில் பல உண்மைகளை தெரிந்து வைத்து இருந்தாலும் அதை மறுத்து வாழவே விரும்புகிறார்கள் என்பது நமக்கு ஆச்சரியமில்லாத உண்மையை இறுதியாக சொல்கிறது. 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US