வீடுகளில் இந்த 7 பொருட்களில் தான் தெய்வம் வாசம் செய்கிறார்கள்.. என்ன தெரியுமா?
நம்முடைய வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் தெய்வம் வாசம் செய்வதாக சொல்கிறார்கள். அந்த பொருட்களில் நாம் குறையாத அளவிற்கு பார்த்துக் கொண்டால் செல்வம் நிலைத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களை நாம் மிகவும் கவனமாகவும் மரியாதையோடும் நடத்துவது அவசியமாக உள்ளது. அப்படியாக வீடுகளில் எந்த பொருட்களில் தெய்வம் வாசம் செய்கிறார் என்பதை பற்றி பார்ப்போம்.
1. தண்ணீர் பானை :
நம்முடைய வீடுகளில் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பானையில் குலதெய்வம் வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. அதனை எப்பொழுதும் சுத்தமாகவும் தண்ணீர் குறையாமல் வைத்திருப்பதும் அவசியமாக இருக்கிறது.

2. உப்பு ஜாடி :
அதில் அன்னலட்சுமி வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. ஆதலால் நம் வீடுகளில் எந்த பொருட்கள் குறைந்தாலும் உப்பு தீராத அளவு பார்த்துக் கொள்வது அவசியமாக உள்ளது.
3. அஞ்சறைப்பெட்டி:
நம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய அஞ்சறைப் பெட்டியில் மகாலட்சுமி வாசம் செய்கிறார். அதனை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பதின் வழியாக மகாலட்சுமி முழு அருளையும் பெறலாம்.
4. ஊறுகாய் பாட்டில் :
இதில் குபேரன் வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. ஆதலால் ஊறுகாயை சாப்பிட்டு பாட்டிலை திறந்து வைப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
5. அரிசி பானை:
இதில் சிவபெருமான் அவாசம் செய்வதாக சொல்கிறார்கள். அன்னம் நம்முடைய வாழ்க்கையில் உயிர் வாழ்வதற்கு உரியது. அதில் சிவபெருமான் வாசம் செய்வதால் அதனை சுத்தமான இடத்தில் வைத்திருப்பது சிவபெருமானின் அருளையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

6. துவரம் பருப்பு:
முருகப் பெருமானுக்கு மிக உகந்த நெவேத்திய பொருட்களில் துவரம் பருப்பு ஒன்று. அதில் முருகப்பெருமான் வாசம் செய்வதால் அதனை எப்பொழுதும் வீடுகளில் குறையாமல் வைத்திருப்பது அவசியமாக இருக்கிறது.
7. மஞ்சள் பொடி:
இதில் அம்பிகை வாசம் செய்கிறார். இந்த மஞ்சள் பொடியை நாம் தினமும் மரியாதையோடு பார்த்துக்கொள்ளும் பொழுது அம்பிகையின் அருளால் வாழ்க்கையில் உள்ள தடைகள் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |