குலதெய்வம் உங்கள் மீது கோபமாக இருக்கிறது என்பதை உணர்த்தும் 7 அறிகுறிகள்
குலதெய்வம் நம்முடைய குடும்பத்தை கண்ணுக்கு தெரிந்த மற்றும் தெரியாத துன்பங்களிலிருந்து காத்து அருளக்கூடிய நம் குடும்ப தெய்வமாகும். இந்த குலதெய்வத்தின் அருள் ஒருவர் வீட்டிற்கு பரிபூரணமாக இருந்தால் மட்டுமே அந்த வீடுகளில் நிம்மதியும் மகிழ்ச்சியும் செய்யும் காரியங்களில் எந்த ஒரு தடைகளும் இல்லாத ஒரு நிலை இருக்கும்.
அப்படியாக ஒரு சிலருக்கு என்னதான் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்தாலும் அதில் நிறைய தடைகள் வந்து கொண்டிருக்கும். இதற்கு குலதெய்வத்தின் கோபம் நம் மீது இருப்பதாக ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
அப்படியாக, குலதெய்வம் நம் மீது மிகுந்த கோபம் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் ஏழு அறிகுறிகள் பற்றி பார்ப்போம்.

1. குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்று கிளம்பினாலே ஏதேனும் தடைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். வேலை ரீதியாக, பிரச்சனை பொருளாதாரத்தில் சிக்கல் அல்லது உடல்நல குறைபாடுகள் என்று ஆலயம் செல்ல விடாமல் தடுப்பதற்கான நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும்
2. ஒருவேளை குலதெய்வம் ஆலயம் சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தாலும் முக்கியமான பூஜைகளில் கலந்து கொள்ள முடியாத நிலை உருவாகும். அதாவது நாம் குலதெய்வம் கோயிலுக்கு செல்ல நேரும்பொழுது அங்கு பூசாரி இல்லாமல் போவது போன்ற நிலையால் மன வருத்தத்துடன் நாம் வீடு திரும்புவது போல் அமையும்.
3. குடும்பங்களுடன் ஒன்றாக இணைந்து குலதெய்வம் கோயிலுக்கு செல்லக்கூடிய ஒரு நிலை வராது. குடும்பமாக கிளம்பினால் சண்டை சச்சரவுகள் வரக்கூடும்.
4. இரவு உறங்கும் பொழுது தேவையில்லாத பயம், கோபம் விபரீதமான கனவுகள் வந்து நம்மை அச்சம் அடைய செய்யும்.

5. வீடுகளில் எல்லாம் சுமூகமான நிலையில் அமைந்து குடும்பங்களோடு கோவிலுக்கு சென்றால், சென்ற இடத்தில் குடும்பத்திற்கு இடையே சண்டை மனஸ்தாபம் ஆகியவை நடந்து தெய்வத்தை வழிபாடு செய்ய முடியாது ஒரு நிலை உருவாகும்.
6. கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய பிறகு உடல் நிலையில் சில குறைபாடுகள் உண்டாகும். காய்ச்சல் தலைவலி போன்ற நோயை சந்திக்க கூடும்.
7. வீடுகளில் எந்த ஒரு சுப காரியங்களும் தடை இல்லாமல் நடக்காது. சுப காரியம் என்று பேச்சு எடுத்தால் தடைகள் மட்டுமே அங்கு முதலில் நிற்கும்.
இவ்வாறான விஷயங்கள் நடந்தால் நிச்சயம் குலதெய்வம் உங்கள் மீது கோபமாக இருக்கக் கூடிய ஒரு அறிகுறியாகும். ஆதலால் இந்த நிலைமையில் இருந்து மீண்டு வருவதற்கு தினமும் வீடுகளில் குலதெய்வத்திற்கு என்று தனியாக ஒரு விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்யுங்கள்.
தினமும் குல தெய்வத்தை மனதார நினைத்து ஐந்து நிமிடம் ஆவது பூஜை அறையில் அமர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். குடும்பங்களுடன் குலதெய்வம் ஆலயம் சென்று அபிஷேக பூஜைகளில் கலந்து கொள்ளுங்கள்.
உங்களுடைய நேர்த்திகடன் நிறைவேற்றாமல் இருந்தால் அதை முதலில் நிறைவேற்றி விடுங்கள். இவ்வாறு செய்யும் பொழுது நீங்கள் செய்த தவறை குலதெய்வம் உங்களுக்கு உணர்த்தி அதிலிருந்து மீண்டு ஒரு நல்ல வாழ்க்கையை அவர் உங்களுக்கு அமைத்து கொடுப்பார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |