இந்த 7 விஷயம் தெரியாமல் தவறியும் வைர நகை அணிந்து விடாதீர்கள்

By Sakthi Raj Apr 29, 2026 06:41 AM GMT
Report

 பொதுவாகவே, மக்களுக்கு ஆடை ஆபரணங்கள் மீது அதிக அளவில் ஆர்வம் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அதிலும், தங்கத்தை விடவும் மக்களுக்கு வைரத்தின் மீது எப்பொழுதும் ஒரு தனி கவர்ச்சி உண்டு. வைரக்கல் கொடுக்கின்ற அந்த பளபளப்பு மற்றும் அதனுடைய அமைப்பு மக்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்து விடுகிறது.

ஆனால், பெரும்பாலும் இது வைர நகையை மிகப்பெரிய அளவில் வசதி படைத்தவர்களே அணிவதை பார்க்க முடிகிறது. அப்படியாக, ஏன் எப்பொழுதும் பணக்காரர்கள் வைர நகையை அதிகம் விரும்பி அணிகிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

ஆன்மீக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் வைரம் அணிவது என்பது நமக்கு நன்மையை கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. வைரத்தில் சுக்கிர பகவானின் ஆதிக்கம் பெற்றிருப்பதால் இது ஆன்மீக ரீதியாக நமக்கு பல நன்மைகளை வழங்குகிறது. அதை பற்றி பார்ப்போம்.

இந்த 7 விஷயம் தெரியாமல் தவறியும் வைர நகை அணிந்து விடாதீர்கள் | 7 Things We Must Know Before Wearing Diamond

1. வைரத்தை நாம் அணியும் பொழுது ஜாதகத்தில் அவை சுக்கிரனின் பலத்தை அதிகரிக்கிறது. ஆதலால் இது ஒருவருக்கு வசதியான வாழ்க்கை முறையை அமைத்துக் கொடுக்கிறது.

2. மேலும், வைரம் தீய சக்திகளிடம் இருந்து நம்மை பாதுகாப்பதோடு நம்மை சுற்றி இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை நீக்கி அதை நேர்மறை ஆற்றல் ஆகவும் மாற்றுகிறது.

3. ஒரு சிலர் எப்பொழுதும் குழப்பமான மனநிலையை கொண்டு இருப்பார்கள். அவர்கள் வைர நகையை அணியும் பொழுது அவர்களுடைய மன நிலையில் தெளிவும் உறுதியாக முடிவெடுக்கக் கூடிய தன்மையும் கிடைக்கிறது.

4. மேலும் வைர நகை மகாலட்சுமி அம்சத்துடன் தொடர்புடையதால் அதை அணியும் பொழுது பொருளாதாரத்தில் நமக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கிறது.

இந்த 7 விஷயம் தெரியாமல் தவறியும் வைர நகை அணிந்து விடாதீர்கள் | 7 Things We Must Know Before Wearing Diamond

5. திருமணமான தம்பதியினர் வைர நகையை அணியும் பொழுது திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி இடையே ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடுகளை அவை உடைக்கிறது.

6. கலை இசை மற்றும் எழுத்து துறையில் இருப்பவர்கள் வைர அணியும் பொழுது அவர்களுடைய கற்பனைத் திறன் மேம்படுகிறது.

7. வைர நகை அணியும் பொழுது அவர்களுக்கு சமுதாயத்தில் மிக உயர்ந்த செல்வாக்கும் மதிப்பும் கிடைக்கிறது. 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US