மறந்தும் இந்த 7 பொருட்களை பிறருக்கு பரிசாக கொடுக்காதீர்கள்
அன்பை வெளிப்படுத்த நாம் பிறருக்கு கொடுப்பது பரிசு.அந்த பரிசை கொடுப்பவருக்கும் வாங்கியவருக்கும் மிக பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும்.இருந்தாலும் நாம் பிறருக்கு கொடுக்கும் பரிசுகள் நம்முடைய உறவை மேலும் பலப்படுத்த வேண்டுமே தவிர அதில் விரிசல் விழக்கூடாது.அந்த வகையில் வாஸ்து ரீதியாக நாம் சிலருக்கு மறந்தும் ஒரு குறிப்பிட்ட பொருட்களை பரிசாக வழங்க கூடாது என்று சொல்லப்படுகிறது.அதை பற்றி பார்ப்போம்.
கடிகாரம்:
பொதுவாக நாம் அனைவரும் ஒருவருக்கு பரிசு வழங்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் சுலபமாக தேர்தெடுப்பது கடிகாரம் தான்.இதை பெரும்பாலான மக்கள் எந்த நிகழ்ச்சி என்றாலும் விரும்பி வாங்கி கொடுக்கிறார்கள்.
ஆனால் கடிகாரம் நிலையான தன்மை கொண்டது அல்ல.ஒரு குறிப்பிட்ட கால அளவை மட்டுமே காட்டும் பொருளாகும்.மேலும் கடிகாரத்தை நாம் ஒருவருக்கு பரிசாக கொடுப்பதால் எதிர்மறை ஆற்றல்,உறவில் நிலையற்ற தன்மை விரிசல் போன்ற சூழல் உருவாகும்.
முள் செடிகள்:
நாம் ஒருபொழுதும் கற்றாழை மற்றும் முள் செடிகளை பரிசாக கொடுக்க கூடாது.இவை அபசகுனமாக பார்க்கப்படுகிறது.இதை பரிசாக கொடுப்பதால் நன்றாக சென்ற உறவில் திடீர் மோதல் குழப்பம் சங்கடம் மற்றும் நிரந்தர பிரிவை ஏற்படுத்திவிடும்.
முகம்பார்க்கும் கண்ணாடி:
முகம் பார்க்கும் கண்ணாடி என்பது பிம்பத்தை பிரதிபலிக்கக் கூடியதாகும்.கண்ணாடியை சரியாக கையாளவில்லை என்றால் உடைந்து விடும்.அதே போல் தான் நாம் கண்ணாடியை பரிசளிக்கும் பொழுது நிலையற்ற தன்மை,சந்தேகம் ஆகியவற்றை ஏற்படுத்தி விடும்.உறவில் மிகப்பெரிய சிக்கல் உண்டாகிவிடும்.
கண்ணாடி பொருட்கள்:
கண்ணாடி பொருட்கள் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும்.ஆதலால் பலரும் விரும்பி அதை நெருங்கிய உறவுகளுக்கு வாங்கி பரிசளிப்பார்கள்.ஆனால் கண்ணாடி பொருட்களை மிக பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.இல்லை என்றால் எதிர்பாராத நேரத்தில் உடைந்து சமயங்களில் நமக்கும் காயங்களை உண்டாக்கி விடும்.
ஆக கண்ணாடி பொருளை கொடுத்து அவர்கள் உடைத்து விட்டால் ஒரு விதமான சங்கடமும் பதட்டமும் உண்டாக்கும்.மேலும் கண்ணாடி பொருளை பரிசளிப்பதால் உறவில் கவலை, பயம், பாதுகாப்பின்மை நிம்மதியின்மை கொடுத்து விடும்.
காலியான பாத்திரம்:
நாம் எப்பொழுதும் பிறருக்கு பரிசு கொடுக்கவேண்டும் என்று நினைத்தால் வீட்டு உபயோக பொருள் தான் முதலில் வாங்கி கொடுக்கவேண்டும் என்று நினைப்போம்.அதில் பொதுவான ஒன்று பாத்திரம், டப்பா போன்ற பொருட்கள்.இவ்வாறான பொருட்கள் பரிசளிக்கும் பொழுது அதிருப்தி, நிறைவில்லாத தன்மையையே ஏற்படுத்தும்.ஆக ஒருவருக்கு பரிசு கொடுக்கும் பொழுது மனதிற்கு நிறைவான பொருளை மட்டுமே கொடுக்க வேண்டும்.
கருப்பு நிற பொருட்கள்:
நாம் பெரும்பாலும் நல்ல விஷயங்கள் நடக்கும் பொழுது கருப்பு நிறம் சம்பந்தமான எந்த ஒரு விஷயத்தையும் பயன்படுத்துவதில்லை.மேலும் கருப்பு என்பது எதிர்மறை ஆற்றல், துக்கம், மரணம் ஆகியவற்றின் அடையாளமாக சொல்லப்படுவதாகும்.ஆக கருப்பு நிறத்தில் இருக்கும் பொருளை அன்பானவர்களுக்கு கொடுக்கும் பொழுது சோகம், மனஅழுத்தம், மோதல் ஆகிய உணர்வுகள் தான் ஏற்படும்.
கூர்மையான பொருட்கள் :
மேலும் கூர்மையான பொருட்கள் எதையும் நாம் பிறருக்கு பரிசளிக்க கூடாது.இது வன்முறை, முறிவு போன்றவற்றின் அடையாளமாகும். இது போன்ற பரிசுகள் பிறரிடம் வாங்குவதும் கொடுப்பதும் நன்மை அல்ல.உறவை கெடுத்து விடும் தன்மை கொண்டவை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |