சனிப்பெயர்ச்சி 2025 - கட்டாயம் பரிகாரம் செய்ய வேண்டிய 7 ராசிக்காரர்கள்!
சனிப்பெயர்ச்சியால் பரிகாரம் செய்யவேண்டிய ராசிகள் குறித்து பார்ப்போம்.
சனிப்பெயர்ச்சி
2025 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சியில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார்.
இதன் அடிப்படையில், மீனம் ராசிக்கு ஐந்து ஆண்டுகளும், கும்பம் ராசிக்காரர்களுக்கு இரண்டரை வருடமும் ஏழரை சனி நடைபெறுகிறது. மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது.
பரிகாரம்
இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் ரிஷபம், துலாம், மகர ராசிகளுக்கு அற்புதமான அனுகூலப்பலன்கள் உண்டாகும். கடகம், விருச்சிக ராசி நேயர்களுக்கு மத்திமமான பலன்கள் உண்டாகும்.
சனி மீனத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் ராசிக்காரர்கள் சனி பகவானுக்கு பரிகாரம் செய்வது மிகவும் நல்லது.
சனிக்கிழமை தோறும் சனிபகவானின் ஆலயத்திற்கு சென்று நீலச்சங்கு, நீலச் செம்பருத்தி, நீலத்தாமரை ஆகிய புஷ்பங்களால் சனியை அலங்கரித்து வழிபடலாம்.
எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், குடை, அடுப்பு போன்றவற்றை ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யலாம். கோவில்களில் நல்லெண்ணெய் தானம் செய்வது நல்லது. கருப்புநிற ஆடை அணிதல், கைக்குட்டை வைத்திருத்தல் நல்லது.