வெள்ளிக்கிழமை அன்று தவறியும் செய்யக்கூடாத 8 விஷயங்கள் என்ன?

By Sakthi Raj Aug 16, 2026 12:11 PM GMT
Report

 ஜோதிட ரீதியாக ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரிய நாளாக இருக்கிறது. அந்த வகையில், வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானுக்குரிய நாள். அந்த தினத்தில் மகாலக்ஷ்மியின் அருளை பெறுவதற்கு வீடுகளில் பூஜைகள் செய்து வழிபாடு செய்வது அவசியம்.

அதனால் இந்த வெள்ளிக்கிழமையில் நாம் குறிப்பிட்ட சில எட்டு விஷயங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. மீறி செய்வதால் நம்முடைய வீட்டில் மகாலட்சுமி தாயார் அருள் நிலைக்காமல் போகலாம் என்று சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.

வெள்ளிக்கிழமை அன்று தவறியும் செய்யக்கூடாத 8 விஷயங்கள் என்ன? | 8 Things We Shouldnt Do On Friday At Home

12 ராசிகள் படி உங்களுடைய திருமணத்தை எந்த உறவு முடிவு செய்வார்கள் தெரியுமா?

12 ராசிகள் படி உங்களுடைய திருமணத்தை எந்த உறவு முடிவு செய்வார்கள் தெரியுமா?

1. வெள்ளிக்கிழமை அன்று ஒருபொழுதும் பிறருக்கு நம் பால், பணம், தயிர், உப்பு ஊசி ஆகியவற்றை கடனாக கொடுக்கக் கூடாது.

2. அதேபோல், வெள்ளிக்கிழமை கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

3. இந்த நாளில் நாம் வீட்டை தண்ணீர் ஊற்றி துடைக்கவோ அல்லது கழுவவோ கட்டாயம் கூடாது.

4. விளக்கு உட்பட எந்த ஒரு பூஜை சாமான்களையும் வெள்ளிக்கிழமைகளில் சுத்தம் செய்வது தவிர்க்க வேண்டும்.

உங்கள் ஜாதகத்தில் கேது எந்த இடத்தில் இருக்கிறாரோ.. அதுதான் உங்கள் வாழ்க்கை பாடமாகும்

உங்கள் ஜாதகத்தில் கேது எந்த இடத்தில் இருக்கிறாரோ.. அதுதான் உங்கள் வாழ்க்கை பாடமாகும்

5. வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் விளக்கேற்றிய பிறகு வீட்டை பெருக்குவதோ குப்பைகளை வெளியே கொட்டுவது கூடாது.

6. வெள்ளிக்கிழமையில் வீடுகளில் இருக்கக்கூடிய பெண்கள் கோபப்படுவோ அழுவதும் கட்டாயமாக கூடாது. இது குடும்பத்தில் மிகப்பெரிய அளவில் பாதிக்கும்.

7. வெள்ளிக்கிழமைகளில் எந்த துணிகளையும் நாம் தைக்க கூடாது. வெள்ளிக்கிழமைகளில் நாம் முடிந்த அளவிற்கு வீட்டில் எந்த பொருட்களையும் சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

8. வெள்ளிக்கிழமைகளில் நம் வீட்டிற்கு விருந்தினர்கள் வருகின்ற பொழுது அவர்களுடைய மனமும் வயிறும் நிறைந்தது போல் நாம் அவர்களை வழி அனுப்பி வைப்பது அவசியம். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US