நல்ல காலம் பிறக்க 90 நாள் சிவ வழிபாடு
தொடக்கம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்று ஒன்று இருக்கும்.அப்படியாக ஒருவர் வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட துயரம் வந்தாலும் அதை தகர்த்து எறியக்கூடிய வலிமை வழிபாட்டிற்கு உண்டு.
மேலும் ஒருவர் துன்பங்களை சந்தித்து கொண்டே இருந்தால் அவர்கள் 90 நாட்கள் தொடர்ந்து அருகில் இருக்கும் சிவாலயம் சென்று வர வாழ்க்கையில் நல்ல திருப்பம் அமையும்.
சிவன் கோயிலுக்கு மாலை 6 மணிக்குப் பிறகு, சிவன் சன்னதி முன்பாக உங்களுக்கு வசதிப்படும் இடத்தில் அமர்ந்து கொள்ளவும்.வடக்கு நோக்கி! 30 நிமிடம் வரையிலும் "ஸ்ரீவாராஹி ஸஹாயம் "என்று ஜபிக்கவும்.
இதே போல,அம்பாள் சன்னதி முன்பாகவும் ஜபிக்கவும் அடுத்த சில நாட்களில் அல்லது சிலருக்கு 90 நாட்களுக்குள்ளேயே உங்களைச் சுற்றிலும் எப்படிப்பட்ட சதிவலை பின்னப்பட்டிருக்கின்றது என்பதை உணர்வீர்கள்.(அந்த சதி அல்லது துரோகம் தகர்ந்து போயிருக்கும்)
அதே சமயம் உங்களது மன உளைச்சல்கள் உங்களை விட்டு விலகிச் சென்றிருக்கும்.
ஸ்ரீவாராஹி ஸஹாயம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |