ஆறுமுகனின் அருளால் உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள்
முருகன் கலியுக வரதன் அவன் கற்று கொடுக்காத பாடம் என்ன?அப்படியாக நமது உடலின் ஆதாரங்களாக விளங்கக்கூடிய ஆறு ஆதாரங்களும் ஆறுமுகனை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.
அதாவது முருகனின் அறுபடை வீடுகளில் ஒவ்வொரு வீடுகளும் நம் உடலில் உள்ள ஒவ்வொரு ஆதாரங்களாக திகழ்கிறது.அதை பற்றி பார்ப்போம்.
ஆறு ஆதாரங்களின் ஆறு தலங்கள்
திருப்பரங்குன்றம் - மூலாதாரம்
திருச்செந்தூர் - மணிபூரகம்
திருவேரகம் - சுவாதிஷ்டானம்
திருவானங்குடி - அநாகம்
திருத்தணி - ஆக்ஞை
பழமுதிர்ச்சோலை - விசுத்தி.
அதாவது முருகப்பெருமான் "ஓம்" என்ற பிராணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கு உபதேசம் செய்தது ஒரு முகம்.
வள்ளியை திருமணம் செய்தது ஒரு முகம்.
தன்னைத் தேடி வரும் பக்தர்களின் குறைகளை கேட்டு தீர்க்கின்ற ஒரு முகம்
சூரனை வதம் செய்வதற்காக பார்வதி தேவியிடம் வேல் வாங்கியது ஒரு முகம்.
சூரனை வதம் செய்தது ஒரு முகம் மயில் மீது ஏறி முருகப்பெருமான் விளையாடுவது ஒரு முகம்.
இப்படியாக ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு பாடத்தை நமக்கு கற்று கொடுக்கிறது.
கலியுக வரதனை தவம் இருந்து அவன் அருளால் அவனை நேரில் கண்டு தரிசித்தவர்கள்
அகத்தியர், நக்கீரர், சிகண்டி முனிவர், நல்லியக்கோடன், ஒளவையார், முருகம்மையார், பொய்யாமொழிப் புலவர், சிதம்பர சுவாமிகள், ஞாவைரோதயர், பகழிக்கூத்தர், கவிராஜ பிள்ளை, குமரகுருபரர், மார்க்க சகாயதேவர், குணசீலர், ராமலிங்க அடிகள், முருகதாச சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், தண்டபாணி சுவாமிகள், அருணகிரிநாதர், கச்சியப்பர், வாரியார் சுவாமிகள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |