ஆடி 3வது செவ்வாய்.., பிரச்சனைகள் தீர செய்ய வேண்டிய வழிபாடு
ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகள் மிகவும் மங்களகரமானவை என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகள் குடும்ப பிரச்சனைகள், தடைகள் மற்றும் கடன் சுமைகள் நீங்க உதவும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆடி மூன்றாவது செவ்வாய் கிழமையான இன்று என்ன வழிபாடு செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
மூன்றாவது ஆடி செவ்வாய்யான இன்று வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, வளையல், பூ, கண்ணாடி, சீப்பு உள்ளிட்ட மங்களப் பொருட்களை வாங்கி அம்மனுக்கு சமர்ப்பித்து வழிபட வேண்டும்.

பின்னர் அந்த பொருட்களை சுமங்கலி பெண்களுக்கு தானமாக வழங்குவது சிறப்பானதாக கருதப்படுகிறது.
குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனைகள், கணவன்-மனைவி கருத்து வேறுபாடு, தொழில் தடைகள், திருமணம் போன்ற மங்கள காரியங்களில் தாமதம் இருப்பவர்கள் இந்த வழிபாட்டை செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.
மங்களப் பொருட்களை வசதிக்கு ஏற்ப பொட்டு, பூ போன்ற எளிய பொருட்களையும் தானமாக வழங்கலாம்.
கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கும் இவற்றை வழங்கலாம்.