குடும்பத்தில் நிம்மதி உண்டாக ஆடி அமாவாசையில் இந்த விஷயங்களை செய்து பாருங்கள்

By Sakthi Raj Jul 23, 2025 03:22 AM GMT
Report

  இந்து மதத்தில் அமாவாசை என்பது ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய முக்கிய நிகழ்வாகும். இந்த தினத்தில் நாம் குலதெய்வத்தை வழிபாடு செய்யவும், இறந்த நம் முன்னோர்களுக்கு வழிபாடு செய்யவும் மிக சிறந்த நாள் ஆகும்.

மேலும், எல்லா மாதத்தில் வரக்கூடிய அமாவாசை நாள் மிக சிறப்பான நாள் என்றாலும், ஆடி அமாவாசையில் வரக்கூடிய நாள் இன்னும் கூடுதல் விஷேசம் நிறைந்தது. அப்படியாக, இவ்வளவு அற்புதமான ஆடி அமாவாசை நாளில் நாம் குடும்பத்தில் நிம்மதி உண்டாக செய்யவேண்டிய முக்கிய வழிபாடுகளைப் பற்றி பார்ப்போம்.

ஆடி அமாவாசை என்றாலே நாம் விரதம் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும் காகத்திற்கு சாப்பாடு வைப்பதும், குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவதையும் வழக்கமாக வைத்திருப்போம்.

குடும்பத்தில் நிம்மதி உண்டாக ஆடி அமாவாசையில் இந்த விஷயங்களை செய்து பாருங்கள் | Aadi Amavasai Worship And Benefits In Tamil

இவ்வாறு செய்வதின் மூலம் நம் முன்னோர்களால் ஏற்பட்ட சாபமும் தோஷமும் நீங்கி நம் வாழ்க்கையில் முன்னேற்றமும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

அப்படியாக, அன்றைய தினத்தில் நாம் இவ்வாறான வழிபாடுகளை மட்டும் செய்யாமல் கூடுதலாக சில விஷயங்களை செய்தால் நம் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும். அவை என்ன செயல்கள் என்று பார்ப்போம்.

இந்த ஆண்டு ஆடி அமாவாசை என்பது ஜூலை மாதம் 24 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினத்தில் பசு மாட்டிற்கு நம்மால் முடிந்த பழங்கள், கீரைகள், வெல்லம், அரிசி போன்றவற்றை கையால் தானம் தர வேண்டும். பிறகு பசு மாட்டை தொட்டு வணங்க வேண்டும்.

நாளை ஆடி அமாவாசை... எந்த ராசியினர் எந்த பொருட்களை தானம் செய்யணும்

நாளை ஆடி அமாவாசை... எந்த ராசியினர் எந்த பொருட்களை தானம் செய்யணும்

அடுத்ததாக நம்மால் முடியும் பட்சத்தில் இரண்டு பிராமினர்களுக்கு ஆடை தானம் செய்யவேண்டும். அதாவது, வேஷ்டி, துண்டு போன்ற தங்களால் இயன்றதை வாங்கித் தருவதன் மூலம் வறுமை நீங்கும். மிக முக்கியமாக ஆடி அமாவாசை நாளில் மாலை 6:00 மணியிலிருந்து 8:00 மணி வரை வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்திற்காக தனியாக ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும்.

கட்டாயம் இந்த தீபம் 2 மணி நேரம் எரிய வேண்டும். கூடவே நிலை வாசலுக்கு வெளியே வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்தவாறு ஒரு தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். இந்த தீபம் சுமார் 1 மணி நேரம் எரிந்தால் போதும்.

அன்றைய தினத்தில் நாம் அன்னதானம் வழங்குவது மிக சிறந்த பலன் அளிக்கும். அவை நம் கர்ம வினைகளை போக்கி நல்வாழ்வு வழங்கும்.

ஆக, ஆடி அமாவாசை நாளில் இந்த செயலில் ஏதேனும் ஒரு செயலை மட்டும் செய்தாலே நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய வறுமையும் துன்பமும் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US