ஆடி திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் கோவிலில் தேரோட்டம்
மதுரை மாவட்டத்தில் 108 வைணவ தலங்களில் ஒன்றான கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது.
இந்தகோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சிறப்புவாய்ந்த ஆடிப்பெருந்திருவிழா கடந்த 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத கள்ளழகர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்து பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார்.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 21 ஜூலை ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெறுகிறது. இத்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சியாக இன்று மாலையில் படி பூஜை, சந்தனம் சாத்துப்படி உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெறுகின்றன.
வருகின்ற 22ஆம் திகதி தீர்த்தவாரி, 23ஆம் திகதி உற்சவ சாந்தி நடக்கிறது. ஆகஸ்ட் 4ஆம் திகதி ஆடி அமாவாசை விழா நடைபெறும்.
இரவு கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருள்கிறார். அத்துடன் ஆடிப்பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |