நாளை(15-08-2025) ஆடி கடைசி வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய முக்கியமான வழிபாடு
தமிழ் மாதம் 12 மாதமும் ஆன்மீக வழிபாட்டிற்குரிய முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக ஆடி இருக்கின்றது. இந்த ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் ஆலயங்களிலும் விசேஷ பூஜைகளும் திருவிழாக்களும் முக்கிய நிகழ்வுகளும் நடைபெறும்.
மேலும், ஆடி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் கன்னிப் பெண்களும் திருமணம் ஆன பெண்களும் விரதம் இருந்து வழிபாடு செய்தால்அவர்கள் வாழ்க்கையில் நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை.
அப்படியாக, நாளை ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று செய்யவேண்டிய முக்கிய வழிபாடுகளும் அதன் பலன்கள் பற்றியும் காணலாம். பொதுவாக, ஆடி வெள்ளிக்கிழமை அன்று இருக்கும் விரதத்தை சுக்கிரவார விரதம் என்று சொல்லுவார்கள்.
எவர் ஒருவர் ஆடி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த கஷ்ட காலங்கள் விலகி விரைவில் நிம்மதியான வாழ்வு பிறக்கும் என்பது நம்பிக்கை.
ஆடி மாதத்தில் வரக்கூடிய கடைசி வெள்ளிக்கிழமையில் பெண்கள் தங்கள் குடும்ப நலனுக்காக விரதம் இருப்பார்கள். அதோடு, வரலக்ஷ்மி நோன்பு அன்று விரதம் இருந்து வழிபாடு செய்ய முடியாதவர்கள் இந்த ஆடி கடைசி வெள்ளிக் கிழமை நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.
மேலும், இந்த ஆடி வெள்ளிக்கிழமையில் ஆண்கள் பெண்கள் இருவரும் விரதம் இருந்து வழிபாடு செய்தால் அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த தோஷங்கள் விலகும். ஒரு சில வீடுகளில் திடீர் என்று கடன் பிரச்சனை ஏற்பட்டு இருக்கும். அவர்கள் கட்டாயம் ஆடி வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் அவர்களுடைய கடன் பிரச்சனைகள் விலகும்.
அதேப்போல், நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் விரதம் இருந்து முறையாக வழிபாடு செய்தால் அம்மன் அருளால் அவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம்கிடைக்கும். ஆடி மாதத்தில் நாகதேவதை வழிபாடு மிகவும் விசேஷமானதாகும்.
குறிப்பாக பெண்கள் இந்த வழிபாடு செய்தால் அவர்கள் குடும்பத்தை பாதுகாத்து நாகதேவதை அருள்புரிவாள் என்பது நம்பிக்கை.
ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும் கட்டாயம் நாளைய ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை பயன்படுத்தி விரதமிருந்து வழிபாடு செய்தால் அவர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை காணலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







