திருமணத்தடை நீங்க ஆடி கிருத்திகையில் தவறாமல் செய்ய வேண்டிய சக்திவாய்ந்த வழிபாடு
ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி கிருத்திகை மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அப்படியாக, 2026 ஆம் ஆண்டு ஆடி கிருத்திகை ஆகஸ்ட் 6ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வருகிறது. முருகப்பெருமானின் பிறந்த நட்சத்திர தினமான இந்த தினத்தில் நம் விரதமிருந்து வழிபாடு செய்வதும் நமக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகளை பெற்றுக் கொடுக்கும்.
இந்த தினத்தில் பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ளும் விதமாக பால் காவடி மற்றும் பன்னீர் காவடி ஆகியவை எடுத்து வழிபாடு செய்வார்கள். வீடுகளில் சிலர் வேல் வைத்து வழிபாடு செய்வது உண்டு.
அவர்கள் பெயிலுக்கு பால் அபிஷேகம் செய்து வேல்மாறல் பாராயணம் செய்த வழிபாடு செய்வது அவர்கள் குடும்பத்தில் அமைதியையும் ஆரோக்கியத்தை நல்ல முன்னேற்றமும் கொடுக்கும்.
மேலும், இந்த தினத்தில் நம் முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியமாக மாதுளம் பழம், தேன் மற்றும் திணை மாவு படைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு, பஞ்சாமிர்தம் படைத்து வழிபாடு செய்வதும் நல்ல பலன்களை பெற்றுக் கொடுக்கும்.
நாம் இந்த தினத்தில் முருகப்பெருமானைவழிபாடு செய்கின்ற பொழுது எதிரிகள் தொல்லை விலகுகிறது. திருமண தடை சந்தித்து கொண்டிருப்பவர்களுக்கு விலகி நல்ல வரன் அமையும். நீண்ட நாட்கள் கணவன் மனைவி பிரிந்து வாழ்கின்ற நிலை இருக்கிறது என்றால் நிச்சயம் அவர்கள் ஒன்று சேர்வதற்கான சூழ்நிலை உருவாகும்.
அதேபோல், எதிரிகள் தொல்லை விலக இவர்கள் அரளி மலரையும், திருமணத்தடை விலக சம்பங்கி மாலையும் குழந்தை வரம் வேண்டுபவர்கள் சிவப்பு ரோஜா மாலையும் படைத்து வழிபாடு செய்வது வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றும்.
இந்த நாளில் குன்றின் மேல் அமைந்திருக்க கூடிய முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது சிறப்பு. மேலும், இந்த நாளில் என்ன விஷயங்கள் செய்ய வேண்டும்? செய்யக்கூடாது? என்ற பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பாரதி ஸ்ரீதர் அவர்கள். அதைப் பற்றி இந்த காணொளியில் பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |