ஆடி அமாவாசையில் காகத்திற்கு எந்த முறையில் உணவளிக்க வேண்டும்?
அமாவாசை நாள் அன்று நம் முன்னோர்களை நினைத்து தானம் செய்வது என்பது அந்த தானம் அவர்களையே சென்று அடையும் என்பது நம்பிக்கை.அதனால் தான் அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்யும் இடத்தில் ஐயர்களுக்கு பச்சரிசியை தானமாக கொடுக்கிறார்கள்.
அதே அன்றைய நாளில் பசு மாட்டிற்கு அகத்திக் கீரையையும் பழங்களையும் தானமாக கொடுக்கும் வழக்கம் உண்டு.
அடுத்த படியாக நம் வீட்டில் எப்பொழுதும் வீட்டில் காகத்திற்கு உணவளிப்பது உண்டு.இருந்தாலும் அமாவாசை நாள் அன்று காகத்திற்கு உணவு வழங்கும் பொழுது கூடுதல் சிறப்பு கிடைக்கிறது.
மேலும் ஒரு வருடத்தில் வரக்கூடிய அமாவாசையில் முக்கியமான அமாவாசையாக கருதப்படுவது தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை.
இந்த மூன்று அமாவாசைகளில் நாம் முன்னோர்களை வழிபட்டால் அந்த வருடம் முழுவதும் நாம் முன்னோர்களை வழிபட்டதற்கு சமம் என்று கூறப்படுகிறது.
அதனால் தான் இந்த மூன்று அமாவாசை தினங்களில் பலரும் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.
தர்ப்பணம் கொடுப்பவர்களாக இருந்தாலும் சரி இல்லை என்றாலும்,அந்த நாளில் நம் வீட்டில் சமைத்த உணவை காகத்திற்கு வைத்த பிறகு சாப்பிடுவதால் நன்மை உண்டாகிறது.
மேலும் பிற நாட்களை காட்டிலும் அமாவசை நாளில் காகத்திற்கு சாதம் வைக்கும் பொழுது கருப்பு எள்ளை கலந்து சிறிது நல்லெண்ணையை ஊற்றி முதலில் அதை முன்னோர்களுக்கு சமர்பித்து விட்டு பிறகு காகத்திற்கு வைக்க வேண்டும்.
இப்படி காகத்திற்கு சாதம் வைக்கும் பொழுது வெறும் தரையில் வைக்காமல் வாழை இலையை போட்டு அதற்கு மேல் இந்த எள் சாதத்தை வைக்க வேண்டும். இப்படி செய்வது மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது.
கூடுதலாக சிறிய கிண்ணத்தில் சுத்தமான குடிக்கும் தண்ணீரை ஊற்றி வைத்து உணவளித்தோம் என்றால் நம்முடைய முன்னோர்களின் ஆசிர்வாதம் என்பது நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.அப்படி செய்வதால் குடும்பத்தில் தேவை இல்லாத குழப்பம் சண்டை சச்சரவுகள் விலகும்.
இதை நாம் மனதார பரிபூர்ணமாக செய்தலே போதும் வாழ்க்கையில் முன்னோர்களின் ஆசிர்வாதத்தால் பல மாற்றங்கள் நடக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |