ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுதல் ஏன் தெரியுமா?
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் நிறைய திருவிழாக்கள் நடைபெறும்.
அதிலும் ஆடி மாதம் என்றால் கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். பொதுவாக ஆடிமாதத்தில் வேப்பிலைக்கும், எலுமிச்சைக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த மாதத்தில் தான் பொறுமையின் சிகரமான பூமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
அத்தனை சிறப்பு வாய்ந்த மாதத்தில் அம்மனுக்கு கூழ் செய்து பக்தர்களுக்கு வழங்கினால் மனம் குளிர்ந்து அம்பாள் அருள் தருவாள் என்பது நம்பிக்கை.
ஒரு முறை தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரின் பொறாமை காரணமாக கார்த்த வீரியார்சுனனின் மகன்கள் கொன்று விடப்படுகின்றனர்.
இதைகேட்டு ஜமதக்னியின் மனைவி ரேணுகாதேவி துக்கம் தாங்காமல், தன் உயிரை விட முடிவு செய்து, தீயை மூட்டி அதில் இறங்கிவிட, அப்போது இந்திரன் மழை பொழியச் செய்து, தீயை அணைத்தான்.
இருப்பினும் சில தீக்காயங்களால் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டதால், வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்பமரத்தின் இலைகளை பறித்து ஆடையாக அணிந்துள்ளார் ரேணுகாதேவி.
பசியைப் போக்க அருகில் இருந்த கிராம மக்களிடம் சென்று உணவு கேட்க, அங்குள்ள கிராம மக்கள் அவளுக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை உணவாக தந்துள்ளனர்.
அதைக் கொண்டு கூழ் தயாரித்து சாப்பிட்டார். அவர் முன், சிவபெருமான் தோன்றி, 'உலக மக்களின் அம்மை நோய் நீங்க, நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரம் ஆகும்' என வரம் அளித்தார்.
இதனால்தான் இதனை நினைவு கூறும் வகையில், ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஆடி மாதம் வீசும் காற்றில் எங்கும் தூசி, கிருமிகள், நோய்கள் பரவும். இது போன்ற நோய்களை தவிர்க்க, கோயில்களில் ஆடி மாதம் முழுதும் கூழ் வார்த்தல், பொங்கல், மாவிளக்கு போட்டு, அம்மனை வழிபட்டு கொண்டாடி மகிழ்வோம்.
இதனால்தான் இதனை நினைவு கூறும் வகையில், ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |